For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மக்களே...! தமிழக மின்சார துறையில் வரும் அதிரடி மாற்றம்...! மத்திய அரசு கொடுத்த ஒப்புதல்...!

TANGEDCO has been approved by the Central Government to split into two.
05:55 AM Jul 13, 2024 IST | Vignesh
மக்களே     தமிழக மின்சார துறையில் வரும் அதிரடி மாற்றம்     மத்திய அரசு கொடுத்த ஒப்புதல்
Advertisement

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகம் (TANGEDCO) இரண்டாக பிரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகம் (TANGEDCO) நிா்வாக காரணங்களுக்காக டான்ஜெட்கோவை இரண்டாக பிரிக்க மத்திய அரசிடம், தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது. இதற்கு தற்போது மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி TANGEDCO இனி ‘தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம்’ என்று ஒரு பிரிவாகவும், ‘தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம்’ என்று இன்னொரு பிரிவாகவும் செயல்பட உள்ளது. இதில், தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் என்பது நிலக்கரி, டீசல், அணு அல்லது வேறு ஏதேனும் எரிபொருட்களை பயன்படுத்தி மின்உற்பத்தி செய்வதை மேற்கொள்ளும்.

Advertisement

அதேபோல் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என்பது காற்று, சூரியஒளி, உயிரி எரிபொருள், கடல் அலை உள்ளிட்டவற்றின் மூலம் எரிசக்தி உற்பத்தியை மேற்கொள்வதற்கான பணிகளை இனி மேற்கொள்ளும். நிா்வாக ரீதியாக TANGEDCO இரண்டாக பிரிக்கப்பட்டாலும், மக்களுக்கான மின் விநியோகம் மற்றும் மின் உற்பத்தியில் எந்த விட பாதிப்பும் இருக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags :
Advertisement