முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உலக சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ்.. 17வயதில் வரலாற்று சாதனை! குவியும் பாராட்டு!

12:08 PM Apr 22, 2024 IST | Mari Thangam
Advertisement

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்று உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறி சென்றுள்ளார்.

Advertisement

பிடே கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் போட்டி தொடர் கனடா நாட்டின் டோரண்டோ நகரத்தில் நடைபெற்று வந்தது. அதில் 8 வீரர்களும், 8 வீராங்கனைகளும் பங்கேற்றனர். இவர்கள் தங்களுக்குள் தலா இரண்டு முறை எதிர்கொள்ள வேண்டும். முடிவில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனை உலக சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்கள்.

இத்தொடரில் 13 சுற்றுகள் முடிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார். இந்த நிலையில்தான் கடைசி சுற்றான 14வது சுற்றின் ஆட்டம் இன்று தொடங்கியது. அமெரிக்காவின் நகமுராவை குகேஷ் கறுப்பு நிற காய்களுடன் எதிர்கொண்டார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்ததால் 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார். நெபோம்நியாச்சி - பேபியானோ காருனா மற்றொரு ஆட்டமும் டிராவில் முடிந்ததால் குகேஷ் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

இதன்மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை மிக இளம் வயதிலேயே வென்ற வீரர் என்ற சாதனையை (17 வயது) குகேஷ் படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனை எதிர்கொள்ள இருக்கிறார். குகேஷுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் எக்ஸ் தளத்தில் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags :
#Tamilnadugrand master gukeshWin FIDE CandidatesYoungest Chess Player
Advertisement
Next Article