For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BREAKING | ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு..? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

08:58 AM May 20, 2024 IST | Chella
breaking   ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு    வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Advertisement

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அஜர்பைஜானின் ஜோல்ஃபா என்ற இடத்தில் அடந்த வனம் மற்றும் மலைப்பகுதியில் சுமார் 17 மணி நேரம் கழித்து உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

அஜர்பைஜானில் இருந்து திரும்பும் போது மோசமான வானிலை காரணமாக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் “கடின தரையிறக்கம்” செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்தது. ஆனால், அதிபர் ரைசியின் ஹெலிகாப்டர் கடுமையாக தரையிறக்கப்பட்டதற்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. மோசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறு அல்லது வேறு எதிர்பாராத பேரழிவு போன்ற பல காரணங்களால் இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம் என பல தளங்கள் தெரிவித்துள்ளன.

Read More : Ebrahim Raisi | தலைமை நீதிபதி to ஈரான் அதிபர்..!! ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய இம்ராஹிப் ரைசியின் பின்னணி என்ன..?

Advertisement