For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'BSc/BVSc' பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு.! ரூ.20,000/- வரை சம்பளம்.! உடனே அப்ளை பண்ணுங்க.!

08:49 PM Feb 07, 2024 IST | 1newsnationuser7
 bsc bvsc  பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு   ரூ 20 000   வரை சம்பளம்   உடனே அப்ளை பண்ணுங்க
Advertisement

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின் படி தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் பணியிடத்தை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Advertisement

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இளங்கலையில் பி.எஸ்சி பட்டப் படிப்பை (மைக்ரோ பயாலஜி பயோடெக்னாலஜி பயோ இன்பர்மேட்டிக்ஸ்) ஆகிய பாடப்பிரிவுகளில் முடித்திருக்க வேண்டும் அல்லது கால்நடை அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பு தற்காலிக பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது . இந்த வேலைவாய்ப்பில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஊதியமாக ரூ.20,000/- வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கட்டணங்கள் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் படிப்பு சான்றிதழ்களை 13.02.2024 தேதிக்குள் தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகம், உடுமலைப்பேட்டை - 642205 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பல தகவல்களை அறிந்து கொள்ள tanuvas.ac.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Tags :
Advertisement