4 மாவட்ட ரேஷன் அட்டைகாரங்களுக்கு வந்தாச்சு குட் நியூஸ் .! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியது. இங்கு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
பொது மக்களின் வீடு மற்றும் உடைமைகளும் கனமழையால் சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை அறிவித்ததை போல தென் மாவட்டங்களான தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களுக்கும் தமிழக அரசு நிவாரண உதவிகளை அறிவித்திருக்கிறது.
இதன்படி தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக 6000 ரூபாயும் 5 கிலோ அரிசியும் நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டம் மக்களுக்கு 1000 ரூபாயும் நிவாரண தொகையாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இவற்றைப் பெறுவதற்கான டோக்கன் விநியோகம் ரேஷன் கடைகளில் தொடங்கியது.
இந்நிலையில் இன்று முதல் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்காக ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு 6000 ரூபாயுடன் சேர்த்து 5 கிலோ அரிசியும் நிவாரணமாக வழங்கப்படுகிறது.