For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

FIR-யை படித்தால் ரத்தம் கொதிக்கிறது.. காக்கி சட்டை போட்டுக்கொண்டு இருக்கிறீர்களே.. வெட்கமாக இல்லையா? - அண்ணாமலை ஆதங்கம்

Reading the FIR makes my blood boil.. You are wearing a khaki shirt.. Aren't you ashamed? - Annamalai
04:34 PM Dec 26, 2024 IST | Mari Thangam
fir யை படித்தால் ரத்தம் கொதிக்கிறது   காக்கி சட்டை போட்டுக்கொண்டு இருக்கிறீர்களே   வெட்கமாக இல்லையா    அண்ணாமலை ஆதங்கம்
Advertisement

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் டிசம்பர் 23ம் தேதி, தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒருவர் ஆண் நண்பரை விரட்டி விட்டு, மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை செல்போனில் எடுத்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

அதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் (டிச.24) பாதிக்கப்பட்ட மாணவி, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஞானசேகரன் (37) என்ற நபரை நேற்று (டிச.25) அதிரடியாக கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு ஞானசேகரன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் விஸ்பரூம் எடுத்ததை தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சிக்கு எதிராக சூளுரை விடுத்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “முதல் தகவல் அறிக்கை எப்படி வெளியானது? அதில் மாணவியின் பெயர் உள்ளிட்ட விவரம் வெளியே விட என்ன காரணம்.. காவல் துறையை தவிர வேறு யார் அந்த தகவல் வெளியில் விட முடியும். குற்றம் செய்த அயோக்கியனை விட்டுவிட்டு, பெண்ணை குற்றவாளி போல் முதல் தகவல் அறிக்கையில் காட்டிருக்காங்க. ரகசியமாக பெண் காதலனை சந்தித்து முத்தம் கொடுத்ததாக FIRல் குறிப்பிட்டு, அதையும் இணையத்தில் பதிவிட்டுருக்காங்க.. வெக்கமா இல்லையா..?

காக்கி சட்டையை போட்டுக்கொண்டு இருக்கிறீர்களே வெட்கமாகவில்லையா? திமுக அமைச்சர்கள் வெட்கப்பட வேண்டும். மரியாதை கொடுத்து பேசி வருகிறேன். வீதிக்கு வந்து பேசினால் வேறு மாதிரி பேசுவேன். அந்த FIRயை படித்தால் ரத்தம் கொதிக்கிறது. எத்தனை நாட்களுக்கு இந்த நாடகத்தை தமிழ்நாட்டில் நடத்துவீர்கள். நாம் அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டும். பத்து நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து 15 ஆவது நாளில் வழக்கல் முடித்து தண்டனை பெற்றுக் கொடுங்கள்..

அரசியலில் இருப்பதால் அடங்கி இருக்கிறேன். இனி சித்தாந்தம், வடக்கு தெற்கு என்ற எந்த எலவையும் பேச போறது இல்லை.. இந்த அரசியல் இனி ஆகாது. எத்தனை ஆர்ப்பாட்டம் செய்வது. அதனால் கட்சியின் தொண்டராக மாநில தலைவராக ஒரு சங்கல்பம் எடுத்திருக்கிறேன். இனிமேல் வேறுமாதிரி தான் உங்களை டீல் பண்ண போகிறோம். ஒவ்வொரு வீட்டிலும் முன்பும் நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கும். நடுத்தர வாழ்வு வாழக்கூடிய நீங்கள் வெளியில் வந்து நில்லுங்கள்.

Read more ; சாட்டை அடி.. 48 நாள் விரதம்.. செருப்பு போட மாட்டேன்..!! இனி வேற மாதிரி தான் டீலிங் இருக்கும்..! – அண்ணாமலை பேச்சால் பரபரப்பு

Tags :
Advertisement