முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’தமிழக நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும்’..!! சர்ச்சையை கிளப்பிய வடமாநில மாணவர்கள்..!!

04:20 PM Apr 16, 2024 IST | Chella
Advertisement

மதுரை எய்ம்ஸ்‌ பெயரால் சேர்க்கப்பட்ட இந்தி‌ பேசும் மாணவர்கள், தங்களிடம் வரும் தமிழக நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

கடந்த 2015-16 மத்திய அரசின் பட்ஜெட்டில் மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதாக பாஜக அறிவித்தது. இந்த அறிவிப்பு முடிந்து நான்கு ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர் 2019 தேர்தலுக்கு முன்பு, பிரதமர் மோடி இறுதியாக மதுரைக்கே வந்து எய்ம்ஸ் அடிக்கல் நாட்டினார். இப்போது மேலும் 5 ஆண்டுகள் கடந்துவிட்டன.ஆனாலும் மருத்துவமனையை கட்டும் பணிகள் வேகமெடுத்ததாக தெரியவில்லை.

தற்போது வரை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்னும் கொஞ்ச நாள் சென்றால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பார்க்காமலேயே முதல் பேட்ச் மாணவர்கள் மருத்துவர்களாக தேர்வாகிவிடுவார்கள் போலிருக்கிறது. இப்படி இருக்கையில், கட்டி‌ முடிக்காத எய்ம்ஸ்‌ பெயரால் சேர்க்கப்பட்ட இந்த இந்தி‌ பேசும் மாணவர்கள், தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

மேலும், தங்களை ஹோலி கூட கொண்டாட அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போதுமான இடவசதி, பேராசிரியர்கள், பயிற்சி செய்ய வசதி இல்லாததை சுட்டிக்காட்டி, தங்களை வேறு எய்ம்ஸ் கல்லூரிக்கு மாற்ற வேண்டும் அல்லது ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று இந்த மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். ஏற்கனவே கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இப்படி இருக்கையில், வடமாநில மாணவர்கள் மருத்துவம் பயில தமிழ்நாட்டில் இடம் கொடுத்தால், அவர்கள் நம் மக்களை இந்தி கற்றுக்கொள்ள சொல்கிறார்களே என்று பல்வேறு தரப்பினரும் கொந்தளித்துள்ளனர்.

Read More : பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! அஞ்சல் துறையில் சூப்பர் திட்டம்..!! வட்டி எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..?

Advertisement
Next Article