Annamalai: தமிழகத்தில் முதல் தாமரை கோவையில் தான் மலரும்!… குடும்பத்துடன் வாரீர்! வாரீர்!… அண்ணாமலை அழைப்பு!
தமிழகத்தின் முதல் தாமரை கோவையில் இருந்து இருக்கும் என்ற நம்பிக்கை தெரிவித்த அண்ணாமலை, எதிர்கால இந்தியாவிற்காக குடும்பத்துடன் அனைவரும் பல்லடம் மாநாட்டிற்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் "என் மண் என் மக்கள் யாத்திரையின்போது பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை மக்கள் அரசியலை எப்போதும் குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்க மாட்டார்கள். கோவை குண்டுவெடிப்பை மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள் என்றார்.
கோவை சிறு குறுதொழில்களுக்கு அதிக கடன் கொடுத்து இருப்பது இந்த அரசில்தான். அரசியல் சூழ்நிலையை பார்த்து கட்சியை ஆதரிப்பார்கள் கோவை மக்கள் எனவும், கடந்த 10 ஆண்டாக எந்த பிரச்சினையும் இங்கு இல்லை எனவும் தெரிவித்தார். தமிழகத்தின் முதல் தாமரை கோவையில் இருந்து இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எதிர்கால இந்தியாவிற்கு பிரதமர் என்ன சொல்ல போகின்றார் என்பதை குடும்பத்துடன் பல்லடம் மாநாட்டிற்கு வந்து கேட்கவேண்டும்.
2021 க்கு பின்பு பிரதமர் பேச போகின்ற முதல் அரசியல் பேச்சு என தெரிவித்த அவர், தமிழக அரசியலில் மீண்டும் ஒரு மாற்றம் 2024 ல் ஏற்படும். மீண்டும் தேசிய கட்சி ஆட்சியில் பா.ஜ.க 40 க்கும் 40 இடங்களை பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். பல்லடத்தில் 1200 ஏக்கரில் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் , பெண்கள் உட்பட யாரும் எந்த துன்பமும் பட கூடாது என்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
English summary: Expressing the hope that Tamil Nadu's first lotus will be from Coimbatore, Annamalai has invited everyone to come to the Palladam Conference with their families for the future of India.
Readmore:விவசாயிகள் போராட்டம்!… மத்திய அரசின் உத்தரவில் உடன்பாடில்லை!… எக்ஸ் நிறுவனம் காட்டம்!