அடுத்த 10 நாட்கள் இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்க போகுது..!! - வெதர்மேன் அலர்ட்
வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள டானா புயல் எந்த திசையை நோக்கி நகர்கிறது, என்ன பாதிப்புகள் ஏற்படும் போன்ற தகவல்களை மக்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில், "உள்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று காலை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அது போல் தென் தமிழகத்தின் சில பகுதிகளும் இணையும். அதே வேளையில் சென்னையில் இரவு நேரங்களில் இருந்து அதிகாலை வரை மழையானது தொடரும்.
அக்டோபர் மாதத்தில் சென்னையில் 350 மி. மீ. மழையை தாண்டிவிட்டது. இது மிதமிஞ்சிய மழைதான். அதே வேளையில் தமிழகத்தில் இந்த மாதம் 150 மி.மீ மழை பெய்துள்ளது. இது 70 சதவீதம் அதிகம். அடுத்த 10 நாட்களில் உள்மாவட்டங்கள், கொங்கு, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும். அது போல் பெங்களூரிலும் மழைக்கு பஞ்சமிருக்காது. இன்று மழை பெய்ய அதிக வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை என்பதை பார்க்கலாம்.
அதாவது சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்தூர், டெல்டா மாவட்டங்கள், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, மதுரை, சிவகங்கை, கொடைக்கானல், திருவண்ணாமலை, விருதுநகர், திண்டுக்கல், விழுப்புரம் , கடலூர் மற்றும் வேலூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை பொருத்தமட்டில் பெரியதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் லேசான மழை பெய்யும். அக்டோபர் 24 - 25 ஆம் தேதி வங்கக் கடலில் உருவாகும் டானா புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. இது ஒடிஸா கடலோரத்தை நோக்கி செல்கிறது. இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Read more ; மைதா உணவுகளை சாப்பிட்டால் உங்கள் உடலில் என்ன நடக்கும்? – மருத்துவர் சொன்ன விளக்கம் இதோ..