தவெக கொடிக்கம்பம் நடுவதற்கு செக் வைத்த போலீஸ்..!! - எச்சரிக்கை விடுத்த விஜய்!!
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி அரசியலில் கால் பதித்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு விஜய் அறிவித்துள்ளார். இந்நிலையில், கட்சியை பலப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் ஆகஸ்ட் 22 விஜய் அறிமுகம் செய்து வைத்தார். ஆகஸ்டு 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். இந்த கட்சிக் கொடியை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து எளிமையான முறையில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து செப்டம்பர் 22 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் விஜய் கட்சியின் முதல் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த கொடி பற்றிய விளக்கத்தை மாநாட்டில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார் விஜய்.
அதனைத்தொடர்ந்து, 234 தொகுதிகளிலும் இன்று கட்சிக் கொடியை தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏற்றி வருகின்றனர். சில இடங்களில் கட்சியினர் அனுமதி இல்லாமல் கொடியேற்றியதாக போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குறிப்பாக சென்னை புதுப்பேட்டை பகுதியில் தடையை மீறி கொடி ஏற்றியதாக புகார் எழுத நிலையில் அங்கு வந்த போலீசாரிடம் அக்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த புகாரைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை சார்பாக எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் 'அனுமதி இன்றி எங்கும் கொடி கம்பங்கள் வைக்கக்கூடாது. முறையான அனுமதி பெற்றே கொடியை ஏற்ற வேண்டும்' என தொண்டர்களுக்கு தலைமை அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. மேலும் விதிகளை மீறி கொடிக்கம்பங்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read more ; Breaking: அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு ரத்து…! அமைச்சர் அதிரடி