முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழ்நாடு அரசியல்..!! ஊழல் வழக்கில் இதுவரை தண்டிக்கப்பட்டு பதவியை பறிகொடுத்தவர்கள் யார் யார்..?

11:44 AM Dec 21, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் குற்ற வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

1991 முதல் 1996ஆம் ஆண்டு காலகட்டத்தில் முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதா, தனது ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக 66.65 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதாவை குற்றவாளியாக அறிவித்து 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் காரணமாக அவர் தனது முதலமைச்சர் பதவியையும், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார்.

அதே கால கட்டத்தில் அதிமுக ஆட்சியின்போது ஊராட்சித்துறை அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. இவர், தகர கொட்டகை ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 25 ஆயிரம் ருபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அப்போது மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வந்த செல்வகணபதி, இந்த தண்டனையால் தனது பதவியை இழந்தார்.

ஜெயலலிதா, செல்வகணபதிக்கு அடுத்து பதவியை இழந்தவர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி. அதிமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 1998ஆம் ஆண்டு தமிழக - கர்நாடகா மாநில எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக புகார் செய்யப்பட்ட வழக்கில், பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை பாலகிருஷ்ண ரெட்டி இழந்தார்.

2006 - 2011 வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், மேல்முறையீடு செய்வதற்காக தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதே போல், அதிமுக ஆட்சியின்போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரா குமாரி, 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் அரசு நிதியை ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எம்.பி, எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், இந்திரா குமாரி, அவரது கணவர் உட்பட 3 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பில் முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதே காலகட்டத்தில் கல்வி அமைச்சராக பதவி வகித்த பொன்னுசாமி மீது வருமானத்திற்கு அதிகமாக 77.49 லட்சம் ரூபாய் சொத்து குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை தனி நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி மற்றும் அவரது குடும்பத்தார் 4 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Tags :
அரசியல்சொத்துக் குவிப்பு வழக்குபதவி பறிப்புபொன்முடிஜெயலலிதா
Advertisement
Next Article