"அம்பேத்கர் என்றால் பிளவர் அல்ல ஃபயர்"..!! அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு பேச்சு..!!
அம்பேத்கர் என்றால் பிளவர் அல்ல ஃபயர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 'ஒரே நாடு ஒரே தோ்தல்' மசோதா விவாதத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரின் பெயரை முழக்கம் இடுவது இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர் என பேசுகின்றனர். கடவுளின் பெயரை சொன்னால் கூட சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், “புஷ்பா திரைப்படத்தில் வரும் வசனம் போல் அம்பேத்கர் என்றால் பிளவர் அல்ல ஃபயர். அதனால்தான் அம்பேத்கர் விவகாரம் நாடு முழுவதும் ஃபயராகி கொண்டிருக்கிறது” என பேசியுள்ளார்.