Alert: அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்... தமிழகம் முழுவதும் கண்காணிப்பை தீவிர படுத்த உத்தரவு...!
காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது .
தமிழகத்தில் பருவமழை பரவலாக பெய்து வரும் காரணத்தினாலும், அண்டை மாநிலமான கர்நாடகாத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு அதிகரித்து வரும் நிலையில் , தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டு அதனை அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகம் பின்பற்ற உத்தரவிட்டுள்ளார்.
காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை. அதன்படி , எல்லையில் உள்ள ஆரம்ப சுகாதார மையம்/தனியார் கிளினிக்குகள்/அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் கண்காணிப்பை வலுப்படுத்துதல். அதிக ஆபத்துள்ள எல்லைப் பகுதிகளில் கூடுதல் DBC(, domestic breeding checkers)களை நிலைநிறுத்துதல். அனைத்து காலி மனைகளையும் சுத்தப்படுத்தவும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புடன் ஒருங்கிணைந்து இனப்பெருக்க ஆதாரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காய்ச்சல் பரவுவதற்கு வழிவகுக்கும் நீர் ஆதாரங்கள் மாசுபடுவதைத் தடுக்க குளோரினேஷனை உறுதிசெய்யவும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அலுவலகங்களின் வளாகங்கள் "ஏடிஸ் இல்லாததாக" மாற்றப்படுவதை உறுதி செய்தல், மருத்துவமனைகளில் இருக்கும் பிரத்யேக காய்ச்சல் வார்டில் கூடுதல் படுக்கை வசதியை உறுதி செய்தல். நோயறிதல் கருவிகள், அத்தியாவசிய மருந்துகள் பிளாஸ்மா பிரிப்பான் ஆகியவற்றை அவசர காலங்களில் தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லவும், காய்ச்சல்/டெங்குவால் ஏற்படும் இறப்புகளைத் தவிர்க்கவும்.
எல்லையில் உள்ள நிலவரத்தை உடனுக்குடன் அறிந்துகொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் தினசரி எல்லையில் இருக்கும் மாநில சுகாதார அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கவும். மாவட்ட சுகாதார அலுவலர்கள் சரியான நேரத்தில் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடங்கவும், எல்லையோரப் பகுதிகளில் விழிப்புடன் இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எல்லையோர பகுதிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒருங்கிணைந்த அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.