For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்..? மத்திய அரசு முக்கிய ஆலோசனை..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

It has been reported that the central government is considering the appointment of new governors for states like Tamil Nadu, Kerala and Telangana.
12:49 PM Jul 19, 2024 IST | Chella
தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி மாற்றம்    மத்திய அரசு முக்கிய ஆலோசனை     வெளியான பரபரப்பு தகவல்
Advertisement

தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

ஆர்.என்.ரவி. கடந்த 2019 ஆம் ஆண்டு நாகாலாந்து ஆளுநராக 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். ஆனால், திடீரென 2021ஆம் ஆண்டு தமிழக ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார். ஆளுநராக பதவியேற்று 5 ஆண்டுங்கள் நிறைவடைய இருக்கும் நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சில தினங்களுக்கு முன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தர்மேந்திர் பிரதான் உள்ளிட்டோரை சந்தித்தார்.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இதையடுத்து, அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆர்.என்.ரவியின் விருப்பத்தின் பேரில் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டாலும் அவர் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவிகளை கூடுதலாக கவனித்து வருகிறார். இதனால் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்கலாமா? என மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

Read More : இந்தியன் வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Tags :
Advertisement