இனி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000..!! சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக போட்ட பிளான்.. லீக் ஆன தகவல்!!
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை 2000 ரூபாயாக உயர்த்த தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட நலத்திட்டங்களையும் கூறப்படாத நலத்திட்டங்களையும் மக்களுக்காக செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பெண்களுக்காக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலமாக ஏழை எளிய குடும்பத் தலைவிகளுக்கு தமிழக அரசு தற்பொழுது மாதம் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட பொழுது நிபந்தனைகள் வைக்கப்பட்டது. அதன்படி தகுதி உள்ள பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டது. பின்னர் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு மேலும் பல குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது வரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலமாக 1 கோடியே 15 லட்சத்து 27172 பெண்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசு தற்பொழுது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் உள்ள நிபந்தனைகளை நீக்கவும் இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்யவும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதன்படி, தமிழக அரசு வழங்க வரும் 1000 ரூபாயை பெறுவதற்கு உண்டான விதிமுறைகளை தளர்த்தும், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Read more ; உயிரை பலி கொண்ட பட்டாசு ஆலை விபத்து… ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு..!!