"அனைவருக்கும் அனைத்தும்" குடியரசு தின விழா பேரணியில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி...!
குடியரசு தின விழா பேரணியில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெறுகிறது.
நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி 75-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் கடமை பாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த அணிவகுப்பில் நாட்டின் கலாச்சாரம், பொருளாதார முன்னேற்றம், ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்திகள் பங்கேற்க உள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பில் 17 ஊர்திகளும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் 6 ஊர்திகளும் அணிவகுப்பில் இடம்பெறுகின்றன. குடியரசு தின விழா பேரணியில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெறுகிறது. குடவோலை முறையை விளக்கும் தமிழக அலங்கார ஊர்தி இடம்பெற்றுள்ளது. ஆண்டுதோறும் குடியரசு தினவிழா பேரணியில் பல்வேறு மாநில அலங்கார ஊர்திகள் பங்கேற்பது வழக்கம் "அனைவருக்கும் அனைத்தும்” என்ற தமிழ்நாடு அரசின் வாசகமும் இடம்பெற்றுள்ளது.
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்தியாவின் அழைப்பை ஏற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.