TNSTC Recruitment : அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை.. டிப்ளமோ முடித்திருந்தால் போதும்.. இதோ முழு விவரம்!!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 499 தொழிற்பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விழுப்புரம், சேலம், கோவை, திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் இந்த பணியிடங்கள் உள்ளன. பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி : தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பதார்கள் பொறியியல், தொழில்நுப்ட படிப்புகளில் டிகிரி அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
காலி பணியிடங்கள்:
இன்ஜினியரிங் – 201 : மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் – 170, சிவில் இன்ஜினியரிங் – 10, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் / தகவல் தொழில்நுட்பம் – 12, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் – 9.
டிப்ளமோ – 140 : மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் – 125, சிவில் – 5, கணினி அறிவியல் – 7, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் – 3
பொறியியல் அல்லாத தொழில்பயிற்சி – 158:
எந்ததெந்த மாவட்டங்களில் ; கோவை – 93, நெல்லை – 53, சென்னை – 22
விண்ணப்பிக்கும் முறை : தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் www.nats.education.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 21ம் தேதியாகும். தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் அக்டோபர் 28ம் தேதி வெளியிடப்படப்படும்.
Read more ; மெரினாவில் வான் சாகசம்.. திமுக அரசிற்கு மக்களின் மீது அக்கறை இல்லை..!! – விசிக ஆதவ் அர்ஜுனா கண்டனம்
.