ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி..!! அதானி நிறுவனத்தின் டெண்டரை ரத்து செய்தது தமிழ்நாடு அரசு..!!
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்துவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இதையொட்டி தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் கோரப்பட்டது. இதில், அதானி நிறுவனம் கோரிய டெண்டர் தொகை மின்வாரிய பட்ஜெட்டிற்கு அதிகமாக இருப்பதால் டெண்டர் ரத்து செய்யப்படுவதாக டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மத்திய அரசு நிதியுதவியுடன் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாய இணைப்புகள் தவிர மற்ற மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படவுள்ளன. முதற்கட்டமாக 8 மாவட்டங்களுக்கு 82 லட்சம் ஸ்மார்ட் மின் மீட்டர்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடுக்கப்பட்டிருந்தது. இந்த டெண்டரில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், இந்த டெண்டரை அதானி நிறுவனத்திற்கு வழங்கக் கூடாது என அன்புமணி உள்ளிட்டோர் தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் தான், தற்போது டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Read More : ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்த லாரி..!! 71 பேர் உயிரிழந்த சோகம்..!!