ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!! இனி இந்த பொருளும் கிடைக்கும்..!!
தமிழக ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில், தமிழக கூட்டுறவுத்துறை முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
ரேஷன் கடைகளில் கேழ்வரகு வினியோகிக்க தமிழக அரசு முடிவு செய்து, கடந்த வருடம்முதல், நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதுமே, இந்த திட்டத்தை விரிவுப்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
எனவேதான், கூடுதலாக மாதம் ஒன்றுக்கு 15,000 மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. அத்துடன், விவசாயிகளிடமிருந்து வருடம் முழுவதும், கேழ்வரகு கொள்முதல் செய்வதற்கு, இந்திய உணவு கழகத்திடம் அனுமதியையும் தமிழக உணவு துறை கேட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தன.
வெளிமாநிலங்களில் இருந்து கேழ்வரகு கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவித்த கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், அனைத்து ரேஷன் கடைகளிலும் தட்டுப்பாடின்றி பாமாயில் வழங்கப்படுவதாக கூறினார். மேலும், ரேஷன் கடைகளுக்கு ஒரே கிழமையில் வார விடுமுறை அளிப்பது குறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Read more ; ஷாக்!. டெங்கு பாதித்து மத்திய அமைச்சர் மனைவி உயிரிழப்பு!.