முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தொடரும் தமிழக மீனவர்கள் கைது... மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்....!

Tamil Nadu Chief Minister Stalin has urged the Sri Lankan government to prevent the imposition of heavy fines on Tamil Nadu fishermen who are arrested.
05:35 AM Sep 24, 2024 IST | Vignesh
Advertisement

கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு அதிக அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்; மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரை சேர்ந்த 37 மீனவர்கள், 3 படகுகளில் மீன்பிடிக்க சென்ற நிலையில், இலங்கை கடற்படையினரால் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய பகுதிகளில் மீன் பிடிக்கும் போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை ஏற்கெனவே சுட்டிக்காட்டி உள்ளேன். தவிர, கைது செய்யப்படும் மீனவர்களிடம், அவர்களது சக்திக்கு மீறிய அபராதத்தை இலங்கை நீதிமன்றங்கள் விதிக்கின்றன.

Advertisement

இவ்வாறு மீனவர்கள், படகுகள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் விதிப்பதை தடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்குவதுடன், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை விரைவில் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags :
arrestFishermanJaisankarmk stalinsrilanka
Advertisement
Next Article