பண்டிகைய கொண்டாடுங்களே.. செப்டம்பர் 17 பொது விடுமுறை..!! தமிழக அரசு அறிவிப்பு..
தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி, நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாது நபி பண்டிகை செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.
இஸ்லாம் மதத்தின் இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு மிலாது நபி பண்டிகை செப்டம்பர் 17-இல் கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிறை தெரியாததால் வருகிற 6-ஆம் தேதி பிறை நாளாக நிச்சயிக்கப்பட்டிருப்பதாகவும், ஆகையால் செப்டம்பர் 17-ஆம் தேதி மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படும் எனவும் தலைமை ஹாஜி தெரிவித்துள்ளார். இறை தூதரான முகமமது நபியின் பிறந்த நாளையே மிலாது நபியாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.
முகமது நபி, கிபி 570 ம் ஆண்டு ரபி உல் அவல் மாதம் எனப்படும் இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தின் 12 ம் நாளில் மக்கா நகரில் தோன்றினார். இந்த நாளையே மிலாது நபியாக இஸ்லாமிய பெருமக்கள் கொண்டாடுகின்றனர். முகமது நபியின் பிறப்பும், இறப்பும் ஒரே நாள் என்பது குறிப்பிடதக்கது..
Read more ; எதற்கு இத்தனை கேள்வி.. விஜய் மாநாடு நடத்தினால் உங்களுக்கு ஏன் பயம்? – தளபதிக்கு ஆதரவாக தமிழிசை..!!