For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உள்ளிட்ட 26 பேருக்கு அர்ஜூனா விருது…!

06:30 AM Dec 21, 2023 IST | 1Newsnation_Admin
தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி  கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உள்ளிட்ட 26 பேருக்கு அர்ஜூனா விருது…
Advertisement

2023ம் ஆண்டுக்கான விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான தேசிய விருதுகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருதும்,பேட்மிண்டன் வீரர்கள் 2 பேருக்கு மேஜர் தயான்சந்த் கேல் விருதும், வழக்கமான பிரிவில் ஐந்து பயிற்சியாளர்களுக்கும், வாழ்நாள் பிரிவில் மூன்று பேருக்கும் துரோணாச்சார்யா விருதும் வழங்கப்பட உள்ளது.

Advertisement

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 2ஆவது உயரிய விருதாக அர்ஜூனா விருது கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான அர்ஜுனா விருது, தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வைஷாலியின் சகோதரரும் செஸ் வீரருமான பிரக்ஞானந்தா அர்ஜூனா விருது பெற்றிந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விருதை வைஷாலி பெற்றுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை 30க்கும் மேற்பட்ட கிராண்ட் மாஸ்டர் இறுக்கும் நிலையில் முதல் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற வீராங்கனை என்ற பெருமையை வைஷாலி பெற்றிருந்தார்.

அதேபோல இந்த ஆண்டிற்கான அர்ஜுனா விருது, சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக இந்திய மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வழங்கப்படவுள்ளது. 33 வயதான இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஏழு போட்டிகளில் 24 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சிறந்த பந்து வீச்சாக 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவரும் ஆவார்.

வைஷாலி, ஷமி மட்டுமின்றி விளையாட்டின் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய மேலும் 24 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவரான திரௌபதி முர்மு கையால் வழங்கப்படவுள்ளது.

தேசிய விளையாட்டு விருது வென்றவர்களின் பட்டியல்:
2023 ஆம் ஆண்டிற்கான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது: சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி (பேட்மிண்டன்).

2023 ஆம் ஆண்டிற்கான அர்ஜுனா விருதுகள்: ஓஜஸ் பிரவின் தியோடலே (வில்வித்தை), அதிதி கோபிசந்த் சுவாமி (வில்வித்தை), முரளி ஸ்ரீசங்கர் (தடகளம்), பருல் சவுத்ரி (தடகளம்), முகமது ஹுசாமுதீன் (குத்துச்சண்டை), ஆர் வைஷாலி (செஸ்), முகமது ஷமி (கிரிக்கெட்), அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்), திவ்யகிருதி சிங் (குதிரையேற்றம்), திக்ஷா தாகர் (கோல்ப்), கிரிஷன் பகதூர் பதக் (ஹாக்கி), சுசீலா சானு (ஹாக்கி), பவன் குமார் (கபடி), ரிது நேகி (கபடி), நஸ்ரீன் (கோ-கோ), பிங்கி (புல்வெளி பந்துகள்), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (துப்பாக்கி சூடு), இஷா சிங் (துப்பாக்கி சூடு), ஹரிந்தர் பால் சிங் சந்து (ஸ்குவாஷ்), அய்ஹிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்), சுனில் குமார் (மல்யுத்தம்), ஆன்டிம் (மல்யுத்தம்), நௌரம் ரோஷிபினா தேவி ( வுஷு), ஷீத்தல் தேவி (பாரா வில்வித்தை), இல்லூரி அஜய் குமார் ரெட்டி (பார்வையற்ற கிரிக்கெட்), பிராச்சி யாதவ் (பாரா கேனோயிங்).

சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது (வழக்கமான பிரிவு): லலித் குமார் (மல்யுத்தம்), ஆர்.பி.ரமேஷ் (சதுரங்கம்), மஹாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்), சிவேந்திர சிங் (ஹாக்கி), கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கர் (மல்லகாம்ப்).

சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது (வாழ்நாள் பிரிவு): ஜஸ்கிரத் சிங் கிரேவால் (கோல்ப்), பாஸ்கரன் இ (கபடி), ஜெயந்த குமார் புஷிலால் (டேபிள் டென்னிஸ்).

வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது: மஞ்சுஷா கன்வார் (பேட்மிண்டன்), வினீத் குமார் சர்மா (ஹாக்கி), கவிதா செல்வராஜ் (கபடி).

மௌலானா அபுல் கலாம் ஆசாத் (MAKA) டிராபி 2023: குரு நானக் தேவ் பல்கலைக்கழகம், அமிர்தசரஸ் (ஒட்டுமொத்த வெற்றியாளர் பல்கலைக்கழகம்); லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டி, பஞ்சாப் (1வது ரன்னர்-அப்), குருக்ஷேத்ரா பல்கலைக்கழகம், குருஷேத்ரா (2வது ரன்னர் அப்).

Tags :
Advertisement