இந்த செயலி உங்கள் போனில் இருந்தால் உடனே டெலிட் பண்ணுங்க.. இல்லனா சிக்கல் தான்!!
சமீபகாலமாக, இணைய மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே. சைபர் மோசடியில் ஈடுப்படுப்வர்கள் மக்களை ஏமாற்ற பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இணைய வசதிகளின் காரணமாக கடன் வசதி எளிதாக கிடைத்தாலும், இதன் மூலம் சில பிரச்சனைகள் அதிகரித்து வருவதையும் யாராலும் மறுக்க முடியாது. இந்நிலையில், கடன் வழங்கும் மொபைல் செயலியில் தொடர்பாக கவனமாக இருக்குமாறு, இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
CashExpand-U Finance Assistant - Loan என்னும் செயலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டது. இந்த செயலி உங்கள் மொபைலில் இருந்தால், உடனடியாக விழிப்புடன் அதனை அகற்றி விடுங்கள் என இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைபர் தோஸ்த் (Cyber Dost) என்னும் நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சைபர் தோஸ்த் X சமூக வலைதளத்தில் கூறியதாவது, ‘CashExpand-U Finance Assistant என்னும் கடன் செயலி குறித்து கவனமாக இருங்கள். இது வெளிநாட்டில் இருந்து செயல்படும் இந்நாட்டின் எதிரிகளுடன் தொடர்புடைய செயலியில் இருக்கலாம்’ என குறிப்பிட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து குறிப்பிட்ட இந்த செயலி அகற்றப்பட்டது. முன்னதால், இதனை சுமார் 1 லட்சம் முறை பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும், இந்த செயலி 4.4 என்ற மதிப்பீட்டை பெற்றிருந்தது. 7.19 ஆயிரம் பேர் இதற்கு நல்ல ரேட்டிங் மதிப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.