முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாஸ் காட்டிய அண்ணாமலை... மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்ட ஏலத்தை நிறுத்திய மத்திய அரசு...!

Tamil Nadu BJP leader Annamalai thanks the central government for suspending the bid for the tungsten mine project
06:04 AM Dec 25, 2024 IST | Vignesh
Advertisement

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஏலத்தை நிறுத்தி வைத்த மத்திய அரசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட, டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி, சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும், மத்திய அரசை வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் சட்ட மன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வந்தார்.

Advertisement

அதே போல மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி மற்றும் நாயக்கர்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிட வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை கடந்த வாரம் டெல்லியில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்துப் பேசி அவரிடம் கடிதத்தை கொடுத்தனர். இந்த நிலையில் நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையைப் பரிசீலித்து, சுரங்க ஏலத்தை நிறுத்தி உள்ளதாக அறிவித்துள்ளார் மத்திய அமைச்சர். அதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற எங்களது கோரிக்கையைப் பரிசீலித்து, சுரங்க ஏலத்தை நிறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாகவும், மதுரை மாவட்ட சகோதர, சகோதரிகள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அவர்கள், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க முடிவெடுப்பதற்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விளக்கமளித்ததோடு, அந்தப் பகுதிகளில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ள, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், சுரங்க ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனத்துக்கு, உரிமம் வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசுக்கும் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது. பாரதப் பிரதமர் மோடி அவர்கள், எப்போதும் தமிழக மக்கள் மற்றும் நமது விவசாயிகளின் நலனை முன்னிறுத்தியே முடிவுகள் மேற்கொள்வார் என்பது, இந்த நடவடிக்கை மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Tags :
central govtDmkkishan reddyMadurai tungstenmk stalinmodiமத்திய அரசு
Advertisement
Next Article