மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.1,000 கிடையாது..!! தமிழ்நாடு அரசு வெளியிடப் போகும் ஜாக்பாட் அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த தொகை அடுத்தாண்டு நடைபெறவுள்ள பட்ஜெட்டில் உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டை அடுத்து மகளிர் உரிமை தொகை திட்டம் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாநிலங்களில் பெண்களுக்கு ரூ.1,500 வழங்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் ரூ.1,000 தான் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தான், மகளிர் உரிமை தொகை திட்டத்தில் வழங்கப்படும் தொகையை மேலும் உயர்த்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, அடுத்தாண்டு நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்தும், எதிர்க்கட்சிகள் அளிக்கப்போகும் வாக்குறுதிகளை மனதில் வைத்தும் ஆளும் திமுக அரசு, மகளிர் உரிமைத்தொகையை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஆனால், இது பற்றி இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன. வேறு சில ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை, அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு இந்த திட்டத்தில் இப்போது என்று இல்லாமல் எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள். மேலும், உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக விரிவாக்கம் செய்ய வாய்ப்பு இல்லை என்பதால், தேர்தல் முடிந்த பின் தமிழ்நாட்டில் உரிமை தொகை திட்டம் மீண்டும் விரிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
Read More : தமிழ்நாடு அரசு ஊழியர்களே..!! இதை கவனிச்சீங்களா..? டிசம்பர் மாத சம்பளத்தில் பிடித்தமா..?