For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”தமிழக பாஜக என்னை புறக்கணிக்கிறது”..!! அண்ணாமலை மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்த குஷ்பு..!!

He has made sensational allegations that the Tamil Nadu BJP does not invite him to any party events and that he is being ignored.
01:48 PM Dec 30, 2024 IST | Chella
”தமிழக பாஜக என்னை புறக்கணிக்கிறது”     அண்ணாமலை மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்த குஷ்பு
Advertisement

குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி, பின் திரையுலகில் முன்னணி நாயகியாக மாறியவர் குஷ்பு. பாலிவுட்டில் இருந்து தென்னிந்திய சினிமா பக்கம் வந்த இவர், முதலில் தெலுங்கில் நடித்து வந்தார். இதையடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரபு இணைந்து நடித்த தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தான் குஷ்பு தமிழில் அறிமுகமானார்.

Advertisement

நடிகை குஷ்பு இயக்குனர் சுந்தர் சியை 10 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். நடிகை, தயாரிப்பாளர் என சினிமாவில் பயணித்து வந்த குஷ்பு, திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து 45 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இவர், தற்போது பாஜகவில் உள்ளார்.

இந்நிலையில் தான், தமிழக பாஜக தன்னை எந்தக் கட்சி நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை என்றும் தான் புறக்கணிக்கப்படுவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். என்னை ஏன் அழைப்பதில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். குஷ்புவின் இந்த வெளிப்படையான குற்றச்சாட்டு பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ”பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்”..!! ஆளுநரை சந்தித்து விஜய் மனு..!! அறிக்கை வெளியிட்ட தவெக..!!

Tags :
Advertisement