மறைந்த தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
உலகப் புகழ்பெற்ற தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் தனது 73-வது வயதில் நேற்றிரவு காலமானார். தவிர்க்க முடியாத இசை கலைஞராக இருந்து வந்த ஜாகிரின் மறைவு ஒட்டுமொத்த இசை உலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரின் மறைவுக்கு இசை கலைஞர்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சரி, ஜாகிர் உசேனின் சொத்து மதிப்பு எவ்வளவு, அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜாகிர் உசேன் : ஆரம்ப வாழ்க்கை
ஜாகிர் உசேன் 1951-ம் ஆண்டு, மார்ச் 9-ம் தேதி மகாராஷ்டிராவின் மும்பையில் பிறந்தார். சிறந்த தபேலா கலைஞரான அல்லா ரக்காவின் மூத்த மகனான இவருக்கு சிறு வயதில் இருந்து இசையில் ஆர்வம் இருந்துள்ளது.
மும்பை, மாஹிமில் உள்ள செயின்ட் மைக்கேல் உயர்நிலைப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார், பின்னர் செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார். இது இசை மற்றும் கல்வியில் அவரது அடித்தளத்தை உறுதிப்படுத்தியது.
திருமண வாழ்க்கை
ஜாகிர் உசேன் கதக் நடனக் கலைஞரும் ஆசிரியருமான அன்டோனியா மின்னெகோலாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனிசா குரேஷி மற்றும் இசபெல்லா குரேஷி என்ற இரு மகள்கள் உள்ளனர்.
ஜாகிர் உசேனின் சொத்து மதிப்பு எவ்வளவு?
ஜாகிர் உசேன் 'சாஸ்', 'ஹீட் அண்ட் டஸ்ட்' உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2024-ம் ஆண்டு கடைசியாக இவர் 'மன்கி மேன்' என்ற படத்தில் நடித்திருந்தார். ஜாகிர் உசேன் தனது இசை மட்டுமின்றி, தனது சிறப்பான நடிப்பால் குறிப்பிடத்தக்க சொத்துக்களை குவித்தார். அவரின் சொத்து மதிப்பு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.8.48 கோடி ரூபாய்.
ஜாகிர் உசேன் ஒரு கச்சேரிக்கு ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. மேலும், ராயல்டி மற்றும் செயல்திறன் கட்டணங்கள் மூலம் ஜாகீர் சம்பாதித்து வந்தார்.
விருதுகளும், அங்கீகாரமும்
ஜாகிர் உசேன் தனது வாழ்க்கையில் 4 கிராமி விருதுகளைப் பெற்றுள்ளார், இதில் 2024 இல் 66வது கிராமி விருதுகளில் மூன்று விருதுகள் அடங்கும். கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் நீடித்த அவரது இடை வாழ்க்கையில், அவர் பல புகழ்பெற்ற சர்வதேச மற்றும் இந்திய கலைஞர்களுடன் பணியாற்றினார்.
இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரிய இசைக்கலைஞர்களில் ஒருவரான ஹுசைன் 1988 இல் பத்மஸ்ரீ, 2002 இல் பத்ம பூஷன் மற்றும் 2023 இல் பத்ம விபூஷன் ஆகிய நாட்டின் மதிப்புமிக்க விருதுகளை பெற்றார்.
ஜாகிர் உசேன் பல சர்வதேச இசைக்கலைஞர்களுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றி உள்ளார். இசை ஆல்பங்கள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகளுக்கு பங்களித்துள்ளார். பெரும்பாலும் பாரம்பரிய இந்திய இசை மற்றும் சமகால உலக இசை இரண்டையும் உள்ளடக்கிய இசையால் ஜாகிர் உசேன் பிரபலமானார்.
கற்பித்தல் மற்றும் பட்டறைகள்:
ஜாகிர் உசேன் பயிற்சி பட்டறைகள், வகுப்புகள் மூலம், இளம் இசைக்கலைஞர்களுக்கு இசை வகுப்புகளை நடத்தி வந்தார். அவரின் இந்த கற்பித்தல் இந்திய பாரம்பரிய இசையை இளைஞர்கள் கற்றுக்கொள்ள ஊக்குவித்ததுடன், அவருக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வழிவகை செய்தன.
ஜாகிர் உசேனின் சொத்து மதிப்பு அவரது தொழில் வாழ்க்கை மற்றும் ஒரு சிறந்த இசைக்கலைஞரின் அந்தஸ்துடன் வெற்றியின் செல்வத்திற்கு ஒரு சான்றாகும். ஜாகிர் உசேன் இந்த உலகை விட்டு மறைந்தாலும் அவரின் இசை என்றென்றும் இந்த உலகில் நிலைத்திருக்கும் என்பதே மறுக்க முடியாத உண்மை...
Read More : இடியோபாடிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸால் அவதிப்பட்ட ஜாகிர் ஹுசைன்.. இதன் அறிகுறிகள் என்னென்ன..?