T20 world cup 2024: இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு தீவிரவாத அமைப்பு அச்சுறுத்தல்..! பாதுகாப்பு
t20 world cup 2024: இந்திய பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி ஜூன் 9ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின்போது மைதானத்தில் புகுந்து படுகொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக ஐ.எஸ். தீவிரவாத ஆதரவு அமைப்பு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை அடுத்து பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது மைதானத்தில் புகுந்து படுகொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மிரட்டல்களை கவனத்தில் கொண்டு வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என நியூயார்க் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெறும் மைதானம் அமைந்திருக்கும் இடத்தில் அடிக்கடி இதுபோன்ற எச்ச்ரிக்கை வந்த வண்ணம் இருக்கும் என்றும், இருந்தாலும் இந்த எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஜூன் 2-ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணி ஜூன் 5-ஆம் தேதி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதனையடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி ஜூன் 9ஆம் தேதி அதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டிகு தீவிரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.