முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குறுந்தாடி, வெள்ளை கலர் டீ-ஷர்ட்..! மாஸாக வாக்களிக்க வந்த நடிகர் ரஜினிகாந்த்…!

08:26 AM Apr 19, 2024 IST | Kathir
Advertisement

18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, இன்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்பட 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19ஆம் தேதி) தேர்தல் நடைபெற்று வருகிறது.

Advertisement

தமிழகத்தை பொறுத்தவரை, மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. வாக்காளர் எண்ணிக்கை 6.23 கோடி. அதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடி. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடி. மற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 8,467. மேலும் முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலுக்கு 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டிருக்கூடிய ஆயிரம் விளக்கு சட்டமன்றத்தின் கீழ் வரக்கூடிய ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்குச்சக்காவடி மையம் வாக்குச்சக்காவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தேர்தலுக்கும் இந்த வாக்குச்சாவடி மையத்தில் தான் நடிகர் ரஜினிகாந்த் வாக்கினை பதிவு செய்வார்.

இன்னும் சற்று நேரத்தில் தனது இல்லம் அமைந்திருக்கும் போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டு வாக்குச்சக்காவடி மையத்திற்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது, இந்நிலையில் நசடிகர் ரஜினிகாந்த் வாக்கினை பதிவு செய்யும் அந்த வாக்குச்சக்காவடி மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுத்தடிந்த்து சிக்கனில் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், வாக்களிக்க காத்திருந்தோர் சற்றுநேரம் நிறுத்திவைக்கப்ட்டனர். பின்னர் உடனடியாக வாக்குச்சக்காவடி மையத்தில் இருக்கக்கூடிய ஊழியர்கள் உடனே அதைசரி செய்தனர். பின்னர் அந்த பழுது ஏற்பட்ட மின்னணு வாக்கு இயந்திரம் எந்த சிக்கலும் இல்லாமல் செயல்பாட்டிற்கு வந்தது.

வாக்குச்சக்காவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக 5 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. தற்போது அந்த வாக்குச்சக்காவடியில் வாக்காளர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். அதன்பிறகு 8 மணியளவில், நடிகர் ரஜினி காந்த் ஸ்டெல்லா மேரிஸ் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். குறுந்தாடி, வெள்ளை கலர் டீ-ஷர்ட் என்று சுறுசுறுப்பாக வந்து வாக்களித்துவிட்டு சென்றார்.

Tags :
rajinikanth cast his vote
Advertisement
Next Article