வைட்டமின் டி குறைபாட்டின் முக்கிய அறிகுறிகள் என்னென்ன தெரியுமா.?!
06:51 AM Jan 06, 2024 IST | 1newsnationuser5
Advertisement
நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் மூலம் நம் உடலில் பல்வேறு நோய் தாக்கங்கள் குறையும். ஆனால் சூரிய ஒளி மூலம் மட்டுமே கிடைக்கும் வைட்டமின் டி சத்து குறைவினால் ஏற்படும் அறிகுறிகள் என்ன என்பதை அறியலாம் வாங்க.
Advertisement
- கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டு தசை மற்றும் எலும்புகள் வீக்கம் அடைந்து முதுகு, மூட்டு பகுதியில் வலி ஏற்படுகிறது.
- வைட்டமின் டி சத்து உடம்பில் குறைந்தால் உடல் எப்போதும் சோர்வாகவே காணப்படும். பலவீனத்திற்கு முக்கிய பங்கு வைட்டமின் டி சத்து குறைவது காரணமாகும்.
- இதனால் மனச்சோர்வு, மனப்பதட்டம் போன்ற மனநிலை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் புண்களை விரைவில் ஆற்றும் வேலையை வைட்டமின் டி செய்து வருகிறது. இது உடலில் குறைந்தால் காயங்கள் எளிதில் ஆறாது.
- மேலும் முடி உதிர்தல், குழந்தைகளின் வளர்ச்சியில் தாமதம், இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படுவது போன்றவைகளுக்கும் வைட்டமின் டி குறைபாடு காரணமாக உள்ளது.
வைட்டமின் டி சத்து உடம்பில் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நம் முன்னோர்களும், மருத்துவர்களும் சூரிய ஒளிபடும்படி சிறிது நேரம் இருக்க சொல்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.