முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடிவயிறு, இடது பக்கம் கன்னம், காதுகளில் வலி ஏற்படுகிறதா..? மாரடைப்பு ஏற்படலாம்..! முழு விவரம்..!

04:20 PM Feb 12, 2024 IST | 1newsnationuser5
Advertisement

பொதுவாக மனிதனுக்கு அடிப்படை தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றும் கருதப்பட்டு வருகிறது. இந்த மூன்று அடிப்படை தேவைகளையும் அனுபவிக்க மனிதனுக்கு ஆரோக்கியமான உடல் நலமும், நீண்ட ஆயுளும் தேவை. தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பல வகையான நோய்கள் மனிதர்களை தாக்குகிறது. இதில் குறிப்பாக மாரடைப்பால் அதிக அளவில் மனிதர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisement

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கு பல்வேறு வகையான காரணங்கள் இருந்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது தற்போதுள்ள உணவு பழக்க வழக்கங்களும், தவறான வாழ்க்கை முறையும் மாரடைப்பை ஏற்படுத்துகின்றது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னதாக ஒரு சில அறிகுறிகள் நம் உடலில் தெரியவரும் அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்.

திடீரென்று அடிவயிற்றில் வலி, பயங்கரமான சோர்வு, மயக்கம் ஏற்படுவது போன்ற உணர்வு, தலை சுற்றல், மூச்சு திணறல், தூக்கமின்மை, பதட்டம், வியர்வை அதிக அளவில் வெளியேறுவது, நெஞ்செரிச்சல், இடது பக்கம் கன்னம், காதுகளில் வலி ஏற்படுவது, கழுத்தில் ஆரம்பித்து இடது பக்கம் கை வரையில் திடீரென்று வலி பரவுவது, சில நேரங்களில் பல் வலியும் ஏற்படலாம். இது போன்ற அறிகுறிகள் ஏதாவது தெரிந்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்ட இந்த அறிகுறிகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மாறுபடலாம். ஆண்கள், பெண்கள் என யாராக இருந்தாலும் அன்றாடம் உடற்பயிற்சி செய்வது, சரியான நேரத்தில் தூங்குவது, ஊட்டச்சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது, 25 வயதிற்கு மேலாக இருப்பவர்கள் மருத்துவரை சந்தித்து செக்கப் செய்து கொள்வது அவசியமான ஒன்றாக படுகிறது.

Tags :
healthHeart problemssymptoms
Advertisement
Next Article