For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கள்ளக்காதலி மீது சந்தேகம்..!! கொலை செய்துவிட்டு தப்பியோடிய கள்ளக்காதலன் மரணம்..!! எப்படி இறந்தார் தெரியுமா..?

The shocking death of a man who stabbed a suspected blackmailer and fled in a car accident has left many shocked.
10:35 AM Dec 09, 2024 IST | Chella
கள்ளக்காதலி மீது சந்தேகம்     கொலை செய்துவிட்டு தப்பியோடிய கள்ளக்காதலன் மரணம்     எப்படி இறந்தார் தெரியுமா
Advertisement

சந்தேகத்தில் கள்ளக்காதலியை குத்திவிட்டு தப்பியோடிய நபர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் அடுத்த அரகண்டநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் சத்யா. இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகளிலேயே கணவர் இறந்துவிட்டார். இதையடுத்து, தனது மகள், மகனுடன் வசித்து வந்துள்ளார். வீட்டு வேலை செய்து பிழைத்து வந்த சத்யாவுக்கும், திருபாலந்தலை சேர்ந்த முருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சமீபமாக சத்யாவின் நடவடிக்கைகள் மீது முருகனுக்கு சந்தேகம் எழுந்த நிலையில், அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கள்ளக்காதலி சத்யாவின் நடத்தையில் சந்தேகமடைந்த முருகன் ஆத்திரத்தில் சத்யாவை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தனது காரில் அவசரமாக தப்பியோடியுள்ளார்.

அப்போது திருக்கோவிலூர் - திருவண்ணாமலை சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த முருகன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காரில் இருந்து அவரை மீட்கும்போது அவரை அவரே கத்தியால் குத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : ரூ.57,000-ஐ கடந்த தங்கம் விலை..!! வாரத்தின் முதல்நாளே உச்சம்..!! ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..?

Tags :
Advertisement