For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"ஹிந்தி-க்கு நோ சொன்ன சூர்யா இப்போ மும்பைல செட்டில் ஆகிட்டாரு..!" - வெளுத்து வாங்கிய அந்தணன்

12:08 PM May 29, 2024 IST | Mari Thangam
 ஹிந்தி க்கு நோ சொன்ன சூர்யா இப்போ மும்பைல செட்டில் ஆகிட்டாரு       வெளுத்து வாங்கிய அந்தணன்
Advertisement

தமிழை விட எந்த மொழியும் தலைசிறந்தது இல்லை. ஹிந்தியை புறக்கணிப்போம் என்று வாய்க்கு வாய் பேசிய சூர்யா தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என அந்தணன் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

இதற்கிடையே சூர்யா கடந்த சில காலமாகவே தனது மனதில் பட்ட பொது கருத்துக்களை பட்டென்று போட்டுடைத்துவந்தார். அது அரசியல் ரீதியாகவும் பெரும் விவாதத்தை கிளப்பின. முக்கியமாக நீட் பிரச்னை குறித்தும், ஜோதிகா கோயில் பற்றி பேசி சர்ச்சையானது குறித்தும் என பல விஷயங்களை பேசினார். இந்நிலையில் சூர்யா குறித்து அந்தணன் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனியார் யூடியூப் சேனலுக்கு அந்தணன் அளித்த பேட்டியில், "நீட் தேர்வு விவாகரத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு சூர்யா தனது கருத்தை ரொம்பவே ஆக்ரோஷமாக பேசினார். ஆனால் திமுக ஆட்சியிலும் நீட் தற்கொலைகள் நடக்கத்தான் செய்கின்றன. இதனை சூர்யா அடக்கியே வாசிக்கிறார். அதாவது ஒரு தேர்வு நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்காது. நம்பிக்கையும் தன்னம்பிக்கையுடனும் இருக்க வேண்டும் எந்த ஒரு கவலையாக இருந்தாலும் சில காலத்துக்குப் பிறகு எல்லாம் மறைந்துவிடும் என்று பேசி இருக்கிறார்.

அப்போது கட்சியை குற்றம் சாட்டிய சூர்யா தற்போது மாணவர்களின் பலவீனத்தை சுட்டிக்காட்டும் விதமாக பேசிவிட்டார். காரணம் திமுக ஆட்சியில் இருக்கும் பொழுது எதுவும் பேசக்கூடாது என்பதற்காக அடக்கி வாசிக்கிறார். சூர்யாவை பொருத்தவரை அதிமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் பொங்கனும். திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் அடக்கி வாசிக்கணும் என்ற பாலிசி படி இருக்கிறார். அதனால் இப்பொழுது இங்கே இவருடைய பேச்சு பலிக்காது என்று தெரிந்த நிலையில் தற்போது மும்பைக்கு ஓடிப்போய் ஒளிந்து விட்டார்.

அது மட்டுமில்லாமல் ஹிந்தி வேண்டாம். தமிழை விட எந்த மொழியும் தலைசிறந்தது இல்லை. ஹிந்தியை புறக்கணிப்போம் என்று வாய்க்கு வாய் பேசிய சூர்யா தற்போது மும்பையில் செட்டில் ஆகும்படி மனைவி மக்களுடன் சொந்த வீட்டை வாங்கி தஞ்சம் அடைந்து விட்டார். நிமிஷத்துக்கு நிமிஷம் பேச்சை மாற்றிக் கொண்டு செயல்களில் உறுதியாக இல்லாத சூர்யா அடிக்கடி குணத்தை பச்சோந்தி போல் மாற்றிக் கொள்கிறார் என்று இவரை பற்றி ஏகப்பட்ட விமர்சனங்களை வலைப்பேச்சு விமர்சகர் அந்தணன் கூறியுள்ளார்.

Read More ; படுத்துக் கொண்டே செல்போன் யூஸ் பண்றீங்களா..? இவ்வளவு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுமா..?

Tags :
Advertisement