For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மறைந்த அப்பாவிற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் இளைய மகன்..!! வெளியான சூப்பர் அப்டேட்..!!

The team has decided to replace Raghava Lawrence with the help of AI technology to replace the late actor Vijayakanth in the film.
06:22 PM Jun 25, 2024 IST | Chella
மறைந்த அப்பாவிற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் இளைய மகன்     வெளியான சூப்பர் அப்டேட்
Advertisement

கேப்டன் விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் புரட்டிப் போட்டது. அவரின் குடும்பத்தை அதிகம் பாதித்தது. இவருக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். அதில், இளையவரான சண்முக பாண்டியன் தன் தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் நடித்துள்ளார். இவர், விஜயகாந்த் உடன் சேர்ந்து நடித்து 2015இல் வெளியான படம் ‘சகாப்தம்’.

Advertisement

இப்படத்தில் தான் விஜயகாந்த் கடைசியாக நடித்திருந்தார். இதையடுத்து, சண்முக பாண்டியன் மதுர வீரன் என்ற படத்தில் நடித்திருந்தார். பின் சில ஆண்டுகளுக்கு முன் விஜயகாந்த் தன்னுடைய மகன் சண்முக பாண்டியன் உடன் சேர்ந்து ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார். இப்படத்தில் விஜயகாந்த் மன்னன் வேடத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால், விஜயகாந்தினுடைய உடல்நிலை சரியில்லாமல் போனதாலும், தயாரிப்பு நிறுவனம் இப்படத்தில் இருந்து விலகியதால், இப்படம் அப்படியே நின்றுவிட்டது.

சிறிய இடைவெளிக்கு பின் தற்போது சண்முகபாண்டியன் ‘படைத்தலைவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் கும்கி படத்தை போல யானை சம்மந்தப்பட்ட படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை வால்டர், ரேக்ளா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அன்பு இயக்குகிறார். முதலில் இந்தப் படத்தின் கதையை விஜயகாந்த் தான் கேட்டிருக்கிறார். அவர்தான் ‘படைத்தலைவன்’ படத்தை எடுங்கள் நன்றாக இருக்கும் என்றெல்லாம் ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி வைத்தாராம். தன்னுடைய அப்பாவின் ஆசைக்காகவே இந்த படத்தில் சண்முக பாண்டியன் நடித்திருக்கிறார்.

விஜயகாந்த் இறந்தவுடன் சண்முக பாண்டியனுடன் ஒரு படத்தில் நடிக்க தயாராக இருப்பதாக ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார். பின் படைத்தலைவன் படத்திலேயே இவர் சிறப்பு வேடத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தார். ஒரு மாதத்திற்கும் மேலாக லாரன்ஸ்க்காக படக்குழுவினர் காத்துக் கொண்டிருந்தனர். இருப்பினும், அவரால் வரமுடியவில்லை. அவர் படம், சமூகப்பணி என்று பிஸியாக இருப்பதால் அவர் நடிக்கவும் இல்லை.

இந்நிலையில், ராகவா லாரன்சுக்கு பதிலாக படைத்தலைவன் படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. நேற்றில் இருந்து விஜயகாந்த்தை படத்தில் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை படக்குழு தொடங்கியுள்ளது. இறந்தும் தன் மகனுக்காக விஜயகாந்த் உதவி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் அடுத்த மாதம் இறுதிக்குள் வெளியிட படக்குழு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

Read More : ’அவரு மட்டும் சிகிச்சைக்கு உதவி பண்ணலன்னா’..!! எமோஷனலாக பேசிய வில்லன் நடிகர் பொன்னம்பலம்..!!

Tags :
Advertisement