Whatsapp-இல் வருகிறது சூப்பர் அப்டேட்..!! Voice to Text..!! ஆண்ட்ராய்டு பயனர்கள் ஹேப்பி..!!
நமது தகவல் பரிமாற்ற முறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் ஒரு செயலி தான் வாட்ஸ் அப். தனிப்பட்ட தகவல் பரிமாற்றத்தில் தொடங்கி தொழில் தொடர்பான தகவல் பரிமாற்றங்கள் வரை வாட்ஸ் அப் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் வரை என அனைவரும் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
வாட்ஸ் அப் செயலியில் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகளையும் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது மேலும் ஒரு அப்டேட்டை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ் அப்பில் Voice Note Transcription என்ற புதிய அம்சம் அறிமுகமாகிறது. இதன் மூலம், ஆங்கிலம், இந்தி, ஸ்பானிஷ் உள்ளிட்ட 5 மொழிகளில் வாய்ஸ் மெசேஜ் ஆக அனுப்பும் குறிஞ்செய்திகளை, அதே மொழியில் எழுத்து வடிவில் மாற்றி அனுப்பிக் கொள்ள முடியும். இதற்கான முதற்கட்ட அப்டேட் ஆண்ட்ராய்டு போன்களில் வரவுள்ளது.
Read More : விஜய்க்கு இப்படி ஒரு நிலைமையா..? அடி மேல் அடி..!! என்ன செய்யப்போகிறார்..?