For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஹேக்கர்களிடம் இருந்து உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்..!! இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!!

10:25 AM May 04, 2024 IST | Chella
ஹேக்கர்களிடம் இருந்து உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்     இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க
Advertisement

இன்றைய நவீன உலகில் அனைத்துமே ஆன்லைன் என்று ஆகிவிட்ட நிலையில், அதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதையும் நாம் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வரும் இந்த சமயத்தில், உங்களுடைய ஸ்மார்ட்போனை ஹேக்கர்களிடமிருந்து எப்படி பாதுகாப்பது என்பது சார்ந்த ஒரு சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

வலிமையான பாஸ்வோர்ட்கள் :

'1 2 3 4 5 6' போன்ற எளிமையான பாஸ்வோர்ட்களை அமைப்பதை காட்டிலும் யாரும் யூகிக்க இயலாத வலிமையான ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அடையாளங்கள், எண்கள் மற்றும் வார்த்தைகள் அடங்கிய ஒரு வலுவான பாஸ்வேர்டை நீங்கள் அமைக்கும்போது, அதனை கண்டுபிடிப்பது சற்று கடினமானதாக இருக்கும்.

வைஃபை நெட்வொர்க் :

பாதுகாப்பற்ற வைஃபை நெட்வொர்க்கள் குறிப்பாக பப்ளிக் ஹாட்ஸ்பாட்டுகளை பயன்படுத்தி உங்களுடைய ஸ்மார்ட் போனில் இன்டர்நெட் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இதுபோன்ற வைஃபை நெட்வொர்க்களை ஹேக்கர்கள் எளிதாக ஹேக் செய்து விடுவார்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், பப்ளிக் வைஃபை நெட்வொர்க்கை பயன்படுத்தும் பட்சத்தில் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்களை உபயோகிக்கலாம்.

ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர் :

உங்களுடைய ஸ்மார்ட்போனில் ஆன்டிவைரஸ் அல்லது மொபைல் செக்யூரிட்டி சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்வதன் மூலமாக மால்வேர்களை நீங்கள் தவிர்க்கலாம்.

வழக்கமான பேக்கப் :

உங்களுடைய ஸ்மார்ட் போன் டேட்டாக்களை கிளவுட் ஸ்டோரேஜ் சர்வீஸ் அல்லது வெளிப்புற சாதனத்திற்கு வழக்கமான இடைவெளியில் பேக்கப் செய்யும் பழக்கத்திற்கு வாருங்கள். பாதுகாப்பு மீறல்கள் அல்லது சாதனம் தோல்வியடையும் சமயத்தில் உங்கள் டேட்டா பாதுகாப்பாக இருக்கும்.

டேட்டாவை என்கிரிப்ட் செய்யவும் :

உங்கள் சாதனத்தில் என்கிரிப்ஷன் செட்டிங்ஸை எனேபிள் செய்வதன் மூலமாக அதிகாரமற்ற அணுகல்களில் இருந்து உங்களுடைய டேட்டாக்களை பாதுகாக்கலாம். குறிப்பாக, உங்களுடைய ஸ்மார்ட் போனில் ரகசியத்திற்கு உட்பட்ட பல தகவல்கள் இருக்கும்போது, இந்த அம்சத்தை நீங்கள் மறக்காமல் எனேபிள் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

அப்ளிகேஷன்களுக்கு அனுமதி :

எந்த ஒரு தெர்ட் பார்ட்டி அப்ளிகேஷன் அல்லது வெப்சைட்டுக்கு உங்களுடைய கான்டக்டுகள், கேலரி மற்றும் பல போன்றவற்றை பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்குவதற்கு முன்பு ஒரு முறைக்கு பலமுறை சிந்திக்க வேண்டும். தெரியாத அல்லது நம்பகம் இல்லாத மூலங்களில் இருந்து அப்ளிகேஷன்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டாம்.

பிஷிங் அட்டாக்குகள் :

பாதுகாப்பற்ற லிங்குகளை கிளிக் செய்யும் முன்பும் அல்லது அட்டாச்மென்ட்களை டவுன்லோட் செய்வதற்கு முன்பு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவற்றில் மால்வேர் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த குறிப்புகளை பின்பற்றி நல்ல சைபர் பாதுகாப்பு விதிமுறைகளை நீங்கள் பராமரிக்கும்போது, உங்களுடைய ஸ்மார்ட்போனை ஹாக்கர்களிடமிருந்து பாதுகாக்கலாம்.

Read More : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது..!! என்ன வழக்கு தெரியுமா..? ஜாமீன் கிடைக்காதாமே..!!

Advertisement