For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வீட்டிலுள்ள பொருட்களே போதும்..!! உங்கள் உதடுகளை மென்மையாக மாற்ற சூப்பர் டிப்ஸ்..!!

In this post, we will look at some oils that will help you get soft lips.
03:04 PM Dec 05, 2024 IST | Chella
வீட்டிலுள்ள பொருட்களே போதும்     உங்கள் உதடுகளை மென்மையாக மாற்ற சூப்பர் டிப்ஸ்
Advertisement

உதடுகளில் கோடுகள் இருப்பது இயல்பான விஷயம் தான். சிலரின் உதடுகளில் அளவுக்கு அதிகமான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் இருக்கும். அவற்றை மறைக்க நாம் சில சமயங்களில் புது புது லிப்ஸ்டிக்-களை முயற்சிப்போம். ஆனால், இனி அவற்றை மறைக்க வேண்டாம். வீட்டில் இயல்பாக இருக்கும் சில பொருட்களை வைத்து, உதட்டில் உள்ள மென்கோடுகள் மற்றும் சுருக்கங்களை போக்கி மிருதுவான மற்றும் மென்மையான உதடுகள் பெற உதவும் சில எண்ணெய்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

* தினமும் நீங்கள் குளித்த பின்னர், சிறிதளவு ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தி உங்கள் உதடுகளுக்கு மசாஜ் செய்து வாருங்கள். இப்படி செய்வதால், உதடுகளில் காணப்படும் சுருக்கங்கள் மறையும். ஆலிவ் எண்ணெயில் உள்ள அமிலக்கூறுகள் உதட்டில் உள்ள சுருக்கங்களை குறைக்க பெரிதும் உதவும்.

* ஆமணக்கு எண்ணெய் உண்மையில் ஒரு இயற்கை மாஸ்சரைஸர். அந்த வகையில், ஆமணக்கு எண்ணெய்யினை உங்கள் உதடுகளுக்கு தவறாமல் (மேற்பூச்சாக) பயன்படுத்தி வர உதடுகளின் மீதுள்ள மென் கோடுகள் மறையும்.

* அழற்சி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு கொண்ட தேங்காய் எண்ணெய்யினை உங்கள் உதட்டுக்கு (ஒருநாளைக்கு 3 முறை) தடவி மிதமாக மசாஜ் செய்து வந்தால், உதடுகள் UV கதிர்களில் இருந்து பாதுகாக்கப்படுவதோடு மிருதுவகவும் பொலிவாகவும் காணப்படும்.

* சரும ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் ஒரு இயற்கை மருந்து தான் கற்றாழை. இந்த கற்றாழை ஜெல்லினை எடுத்து உதடுகளுக்கு அவ்வப்போது மசாஜ் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

* திராட்சை சாற்றில் போதுமான அளவு வைட்டமின் ஈ காணப்படுகிறது. அந்த வைட்டமின் ஆனது சரும அழற்சியை தடுப்பதோடு சருமத்தில் காணப்படும் சுருக்கங்கள் மற்றும் மென் கோடுகளையும் மறைக்கிறது.

* சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை முழுவதுமாக அகற்றும் பண்பு சர்க்கரைக்கு உள்ளது. அந்த வகையில், போதுமான அளவு சர்க்கரையுடன் ஆலிவ் எண்ணெய் சிறிதளவு சேர்த்து ஸ்க்ரப் போல் தயாரித்து உதடுகளுக்கு பயன்படுத்த்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை பாதாம் அல்லது ஜோஜோபா எண்ணெய்யில் கலக்கி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெய்-யை தினமும் இரவு தூங்க செல்லும் போது உதட்டில் உபயோகித்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும். உதடுகள் மென்மையாக காணப்படுவதை நீங்கள் உணர்வீர்கள்.

* எலுமிச்சையில் போதுமான அளவு வைட்டமின் சி காணப்படுகிறது. இந்த வைட்டமின் ஆனது, சருமத்துளைகளில் அடைந்திருக்கும் இறந்த செல்களை வெளியேற்றி பொலிவான, மிருதவான உதடுகள் பெற உதவுகிறது.

* அன்னாசி பழ சாற்றில் வைட்டமின் சி மற்றும் ப்ரோமெலைன் காணப்படுகிறது. இவை இரண்டும் இறந்த திசுக்களை அகற்றி, புதிய திசுக்களின் உருவாக்கத்திற்கு உதவுகிறது. அந்த வகையில் உதடுகளின் சுருக்கங்களை மறைக்க இது உதவுகிறது.

Read More : கழிவுநீர் கலந்த குடிநீரை அமைச்சரும், திமுகவினரும் குடிப்பார்களா..? பாஜக தலைவர் அண்ணாமலை தாக்கு..!!

Tags :
Advertisement