முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெற்றோர்களே..!! இதை மட்டும் செய்தால் லட்சக்கணக்கில் பணம் வரும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

LIC has launched an insurance scheme called Kanyadan which provides dual benefits of protection and savings for the future of girl children. is providing
05:40 AM Jun 28, 2024 IST | Chella
Advertisement

பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பு மற்றும் சேமிப்பு ஆகிய இரட்டை பயன்களை கொடுக்கும் கன்யாடன் என்ற காப்பீட்டு திட்டத்தை எல்.ஐ.சி. (LIC) வழங்கி வருகிறது.

Advertisement

காப்பீட்டு சந்தையில் ஏராளமான நிறுவனங்கள் இருந்தாலும், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. தான் பலருக்கும் நம்பிக்கையான ஒன்றாக இருக்கிறது. எல்.ஐ.சி. பலவிதமான பாலிசிகளை வழங்கும் நிலையில், பெண் குழந்தைகளின் நலனுக்காக கன்யாடன் என்ற பாலிசியை வழங்கி வருகிறது. இந்த பாலிசியில் ஒரு வயதில் இருந்து பெண் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்யலாம். 13 முதல் 25 வருடங்கள் வரை பாலிசி காலம் இருக்கிறது. ஆனால், எப்போதும் கூடுதலான பாலிசி காலத்தை எடுத்துக் கொள்வதுதான், நல்ல லாபத்தையும், கூடுதல் முதிர்வு தொகையையும் தரும்.

எனவே, 25 வருட பாலிசியை தேர்வு செய்தால், 22 ஆண்டுகளுக்கு மட்டுமே பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், 25 ஆண்டுகளுக்குப் பின் முதிர்ச்சியடையும். இந்த பாலிசியை எடுக்கும் பெண் குழந்தையின் தந்தைக்கு 18 - 50 வயதிற்குள் இருக்க வேண்டும். பாலிசியை எடுத்த மூன்றாம் ஆண்டில் இருந்து கடன் வாங்கிக் கொள்ளலாம். 2 ஆண்டுகள் கழித்து பாலிசியை சரண்டர் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஒரு மாதத்தில் பிரீமியம் செலுத்தாவிட்டால், அடுத்த 30 நாட்களுக்குள் அபராதம் இல்லாமல் பிரீமியத்தை செலுத்தலாம்.

இந்த பாலிசி மூலம் இரண்டு வழிகளில் வரிச் சலுகை பெறலாம். சட்டப்பிரிவு 80C, சட்டப்பிரிவு 10D ஆகியவற்றின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. காப்பீட்டுத் தொகை குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. ஆனால், அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. 25 ஆண்டுகள் பாலிசி எடுத்து ஆண்டுதோறும் ரூ.41,367 பிரீமியம் செலுத்தினால், மாதாந்திர பிரீமியம் ரூ.3,447ஆக இருக்கும். 22 ஆண்டுகளுக்கு இவ்வாறு முதலீடு செய்தால், 25 ஆண்டுகளுக்குப் பின் ரூ.22.5 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

பாலிசி எடுத்திருக்கும்போது தந்தை இறந்தால், அடுத்து வரும் காலத்திற்கு அவரது பெண் பிரீமியம் செலுத்த வேண்டாம். அதாவது, அடுத்து வரும் ஆண்டுகளுக்கு மொத்தமாக பிரீமியம் தள்ளுபடி செய்யப்படும். இது தவிர 25 ஆண்டுகள் முடியும் வரை ஆண்டுதோறும் ரூ.1 லட்சமும், 25ஆம் ஆண்டில் முதிர்வுத் தொகையும் வழங்கப்படுகிறது. சாலை விபத்தில் தந்தை இறந்தால், அவர் நியமித்த நாமினிக்கு விபத்து மரணத்திற்காக, ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

Read More : Jio New 5g Plans | ரூ.600 வரை உயர்ந்த ஜியோ ரீசார்ஜ் கட்டணம்..!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!

Tags :
best 5 policy of licbest lic policyjeevan umang policylic policylic policy plansPolicy
Advertisement
Next Article