வருமான வரி கட்ட ஆன்லைனில் சூப்பர் வசதி..!! அடடே இது ரொம்ப ஈசியா இருக்கே..!! நோட் பண்ணிக்கோங்க..!!
வரிக்கு உட்பட்டவர்கள் ஆண்டுதோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். தனிநபர்கள் அனைவருமே வருமான வரி செலுத்த வேண்டும். தனிநபர்கள் மட்டுமின்றி இந்து கூட்டு குடும்பங்கள், தனிநபர் சங்கங்கள், நிறுவனங்கள், LLP உள்ளிட்டோர் வருமான வரி செலுத்த வேண்டும். நீங்கள் வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால், அவசரத்துக்கு வங்கிகளில் கடன் கேட்க நேரிட்டால் கிடைக்காமல் போய்விடும். அப்படியே நீங்கள் கடன் கேட்டாலும், வருமான வரி தாக்கல் செய்துவிட்டு வருமாறு சொல்வார்கள். அதேபோல, ஒரு குறிப்பிட்ட அளவு தொகைக்கு மேல் சொத்து வாங்கும்போது அல்லது விற்கும்போது அதற்குரிய Source உங்களால் காண்பிக்க முடியாமல் போய்விடும்.
அதேபோல, நீங்கள் ஏதாவது ஒரு தொழில் செய்யும்போது, உங்கள் பான் எண்ணுக்கு யாராவது TDS கட்டி இருந்தால் அதனை Refund வாங்க முடியாது. அதனால்தான், வரியை முறையாக கட்ட சொல்லி அரசு அறிவுறுத்துகிறது. இதற்கு பரிசுகளையும் தந்து ஊக்குவிக்கிறது. ஆன்லைனில் வரி செலுத்த கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளலாம்.
-- https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற வெப்சைட்டில், இ-ஃபைலிங் போர்ட்டலில் உள்ள "e-pay Tax" பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
-- இப்போது புதிய பக்கம் திறக்கப்படும். இந்த வெப்பேஜில் எந்த ஆண்டுக்கு நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டுமோ? நீங்கள் செலுத்த போகும் பேமெண்டின் வகை அதாவது அட்வான்ஸ் டேக்ஸ் செல்ஃப் அசெஸ்மென்ட் டேக்ஸ் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.
-- பிறகு "Continue" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
-- பிறகு, ஸ்கிரீனில் உள்ள பக்கத்தில் வருமான வரி தொகை, கூடுதல் கட்டணம் (ஏதேனும் இருந்தால்), மேல் வரி (ஏதேனும் இருந்தால்) போன்ற விவரங்களை பிழையில்லாமல் நிரப்ப வேண்டும்.
-- பிறகு, பேமெண்ட் செலுத்த வேண்டும். பேமெண்ட் செலுத்துவதற்கு உங்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் இருக்கின்றன. ஆன்லைன் (டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், RTGS/NEFT) மற்றும் ஆஃப்லைன் (பேங்க் சலான் மற்றும் RTGS/NEFT).
ஆஃப்லைன் :
பெரிய அளவிலான தொகையை வருமான வரியாக செலுத்துபவர்கள் பெரும்பாலும் ஆஃப்லைன் பேமெண்ட் முறையை தேர்ந்தெடுப்பார்கள். இதற்கும் 2 விதமான ஆப்ஷன்கள் உள்ளன. அவை பேங்க் சலான் மற்றும் RTGS/NEFT. போன்பே
ஒருவேளை, இணைய பக்கத்தில் சில தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தால், டிஜிட்டல் கட்டண முறையான ஃபோன் பே மூலமாக எளிதில் வருமான வரி செலுத்தி கொள்ளலாம். இதன்மூலம் எப்படி வரிகளை செலுத்த வேண்டும் தெரியுமா? இதோ அதற்கான வழிமுறைகள்.
-- இதில், PhonePe பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கே "வருமான வரி" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
-- பிறகு, நீங்கள் செலுத்த விரும்பும் வரி வகை என்ன? மதிப்பீட்டு வருடம் என்ன? பான் கார்டு விவரங்கள் போன்றவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.
-- இப்போது, வரித்தொகையை பதிவிட்டு, உங்களுக்கு விருப்பமான கட்டண முறையை பயன்படுத்தி செலுத்த வேண்டும்.
-- பணம் செலுத்திய பிறகு, அந்த தொகை இரண்டு வேலை நாட்களுக்குள் வரி போர்ட்டலில் வரவு வைக்கப்படும்.
-- இந்த புதிய ஆப் ஃபோன் பே பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கே "வருமான வரி" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
-- பிறகு, நீங்கள் செலுத்த விரும்பும் வரி வகை என்ன? மதிப்பீட்டு வருடம் என்ன? பான் கார்டு விவரங்கள்? என்பது போன்றவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்
-- இப்போது, வரித்தொகையை பதிவிட்டு, உங்களுக்கு விருப்பமான கட்டண முறையை பயன்படுத்தி செலுத்த வேண்டும்.
-- பணம் செலுத்திய பிறகு, அந்த தொகை இரண்டு வேலை நாட்களுக்குள் வரி போர்ட்டலில் வரவு வைக்கப்படும்.