முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தொலைந்துபோன மொபைல் போனை கண்டுபிடிக்க உதவும் சூப்பர் ஆப்!! சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

05:55 AM Jun 04, 2024 IST | Baskar
Advertisement

ஆண்ட்ராய்டு போன் தொலைந்து விட்டாலோ அல்லது அது திருடப்பட்டு விட்டாலோ, உங்களுடைய போனை மீட்டெடுக்கவும் கூகுள் ஆப் உதவுகிறது.

Advertisement

ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு கூகுளின் Find My Device என்பது தரவுகளுக்கான முதன்மை பாதுகாப்பு அடுக்காக அமைகிறது. இந்த அம்சத்தை பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய போனின் இருப்பிடத்தை அறியலாம், அதனை லாக் செய்யலாம் அல்லது அதில் உள்ள அனைத்து தகவல்களையும் அழிக்கலாம். ஆனால் இந்த அம்சத்தை ஏற்கனவே உங்களுடைய சாதனத்தில் நீங்கள் எனேபிள் செய்திருந்தால் மட்டுமே பயனளிக்கும்.

ஸ்மார்ட்போனில் Settings அப்ளிகேஷனை முதலில் ஓபன் செய்ய வேண்டும். பிறகு Google என்பதை கிளிக் செய்ய வேண்டும். போனின் வெர்சனை பொறுத்து All Services என்ற ஆப்ஷன் இருந்தால் அதனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு, Look for Find My Device என்ற ஆப்ஷன் இருந்தால் அதனை அழுத்தவும். Use Find My Device ஆப்ஷன் ஸ்விட்ச் ஆன் ஆகி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். போனில் Find My Device ஆப்ஷனை எனேபிள் செய்த உடன் வெப் பிரவுசர் அல்லது மற்றொரு போனை பயன்படுத்தி உங்கள் போனின் லொகேஷனை நீங்கள் கண்டறியலாம்.

வெப் பிரவுசர் அல்லது மற்றொரு ஆண்ட்ராய்டு சாதனத்தை பயன்படுத்தி google.com/android/find என்ற லிங்கில் சென்று, தொலைந்து போன உங்கள் போனுடன் தொடர்புடைய கூகுள் அக்கவுண்டில் லாகின் செய்யவும். இங்கு உங்களுடைய அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து ஆண்ட்ராய்டு சாதனங்களையும் உங்களால் பார்க்க முடியும். தொலைந்து போன உங்கள் சாதனத்தை கிளிக் செய்யுங்கள். இப்போது அதனை உங்களால் ட்ராக் செய்ய முடியும்.

போனில் இன்டர்நெட் இணைப்பை இருந்தால் மட்டுமே இந்த அம்சம் வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை உங்களுடைய போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தால், ஸ்விட்ச் ஆஃப் ஆகும்பொழுது அது எந்த லொகேஷனில் இருந்தது என்பதை இதன் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை உங்களுடைய போனை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் “Play Sound” அம்சத்தை பயன்படுத்துவதன் மூலமாக அது அருகில் இருப்பதை உங்களால் தெரிந்து கொள்ள முடியும். மேலும் உங்களுடைய போன் திருடப்பட்டு இருப்பதாக நீங்கள் நம்பினால் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து PIN நம்பர், பாஸ்வோர்ட் அல்லது பேட்டர்ன் பயன்படுத்தி லாக் செய்யலாம். கூடுதலாக உங்கள் போனில் உள்ள அனைத்து டேட்டாக்களையும் உங்களால் அழிக்கவும் முடியும். ஆனால் இவ்வாறு செய்வது உங்களுடைய போனில் உள்ள தகவல்களை நிரந்தரமாக அழித்துவிடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

Read More: வாக்களிப்பில் உலக சாதனை : இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பெருமிதம்!

Tags :
ஆண்டராய்டுகூகுள்செல்போன்தொழில்நுட்பம்மொபைல் போன்
Advertisement
Next Article