For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புதிய அறிவிப்பு...! 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை...!

09:13 AM Apr 06, 2024 IST | Vignesh
புதிய அறிவிப்பு     4 முதல் 9 ம் வகுப்பு  மாணவர்களுக்கு ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை
Advertisement

4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 22, 23-ம் தேதிகளில் அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும்.

இது குறித்து மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்றுடன் பருவதேர்வு முடிந்துவிட்டது. அவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை. 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஏப்ரல் 8, 10, 12-ம் தேதிகளில் பள்ளிக்கு வந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். இடைப்பட்ட தினங்கள் அரசு மற்றும் வார விடுமுறை நாட்கள் அன்று பள்ளிகளுக்கு விடுமுறை.

Advertisement

அதன்பிறகு, தேர்தல் பணிகள் காரணமாக ஏப்ரல் 15 முதல் 21-ம் தேதி வரை மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை. இந்த மாணவர்களுக்கு மீண்டும் ஏப்ரல் 22, 23-ம் தேதிகளில் அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும். ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை விடப்படும். ஆசிரியர்கள் அனைவரும் இறுதி வேலை நாளான ஏப்ரல் 26-ம் தேதி வரை பள்ளிக்கு வருவது அவசியம்.அந்த நாட்களில் மாணவர் சேர்க்கை, விடைத்தாள் மதிப்பீடு மற்றும் இதர அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement