For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Summer : தொடங்கிய கோடை வெயில்... சீரான குடிநீர் விநியோகம் செய்ய உத்தரவு...! உடனே இந்த எண்ணுக்கு புகார் செய்யலாம்...!

07:10 AM Mar 06, 2024 IST | 1newsnationuser2
summer   தொடங்கிய கோடை வெயில்    சீரான குடிநீர் விநியோகம் செய்ய உத்தரவு     உடனே இந்த எண்ணுக்கு புகார் செய்யலாம்
Advertisement

கோடைக்காலத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்கு ஏதுவாக சேலம் மாவட்டத்தில் மண்டல அளவிலான பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; எதிர்வரும் கோடைக்காலத்தில் சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதை உறுதிசெய்திடும் வகையிலும், குடிநீர் தேவைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சேலம் மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறையினை 1077 மற்றும் 0427-2450498 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

மேலும், கோடைக்காலத்தில் குடிநீர் தேவைகள் அதிகம் உள்ளதாகக் கருதப்படும் கீழ்க்கண்ட 8 வட்டாரங்களுக்கு மண்டல அளவிலான பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், கொளத்தூர் வட்டாரத்திற்குட்பட்டவர்கள் செயற்பொறியாளர் (ஊ.வ), சேலம் அவர்களை 73737 04567 என்ற எண்ணிலும், காடையாம்பட்டி வட்டாரத்திற்குட்பட்டவர்கள் உதவி இயக்குநர் (தணிக்கை). சேலம் அவர்களை 74026 06747 என்ற எண்ணிலும், ஓமலூர் வட்டாரத்திற்குட்பட்டவர்கள் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்). சேலம் அவர்களை 74026 06746 என்ற எண்ணிலும், அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்திற்குட்பட்டவர்கள் உதவி திட்ட அலுவலர் (ஊதியம் மற்றும் வேலை வாய்ப்பு). மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சேலம் அவர்களை 74026 06751 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், தாரமங்கலம் வட்டாரத்திற்குட்பட்டவர்கள் உதவி திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு 2), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சேலம் அவர்களை 7402606753 என்ற எண்ணிலும், பனமரத்துப்பட்டி வட்டாரத்திற்குட்பட்டவர்கள் உதவி செயற்பொறியாளர் (ஊ.வ), சேலம் அவர்களை 74026 06740 என்ற எண்ணிலும், கெங்கவல்லி வட்டாரத்திற்குட்பட்டவர்கள் உதவி செயற்பொறியாளர் (ஊ.வ), ஆத்தூர் அவர்களை 74026 06742 என்ற எண்ணிலும், மேச்சேரி வட்டாரத்திற்குட்பட்டவர்கள் உதவி செயற்பொறியாளர் (சாலைகள் மற்றும் பாலங்கள்), ஓமலூர் அவர்களை 74026 06739 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement