For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சும்மா அதிருதா!… களமிறங்கிய தோனி!… விண்ணை முட்டும் ரசிகர்களின் கோஷம்!… காதை மூடிக்கொண்ட ரஸல்!

05:27 AM Apr 09, 2024 IST | Kokila
சும்மா அதிருதா … களமிறங்கிய தோனி … விண்ணை முட்டும் ரசிகர்களின் கோஷம் … காதை மூடிக்கொண்ட ரஸல்
Advertisement

Dhoni: கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தல தோனி களத்தில் இறங்கிய தருணத்தின்போது ரசிகர்களின் விண்ணை முட்டும் கோஷத்தை தாக்கு பிடிக்க முடியாமல் ரஸல் காதுகளை மூடிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

ஐபிஎல் தொடரின் 22வது லீக் ஆட்டம் சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில்
நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிலிப் சால்ட், துஷார் தேஷ்பாண்டே வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா அணி வீரர்கள் சுனில் நரைன் 27 ரன்களிலும், ரகுவன்ஷி 24 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களிலும் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 34 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள், முஸ்தாபிசுர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் ரச்சின் ரவீந்திரா மற்றும் கேப்டன் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர். ரவீந்திரா 15 (8) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேற, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட் 45 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். மறுமுனையில் நிதானமாக ரன் சேர்த்துக்கொண்டிருந்த டேரில் மிட்செல் 25 (19) ரன்களில் சுனில் நரைன் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்த ஷிவம் துபே 28 (18) ரன்களில் ஆட்டமிழந்தார்.

கெய்க்வாட் 58 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 67 ரன்களும், தோனி 1 (3) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் சென்னை அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக வைபவ் அரோரா 2 விக்கெட்டுகளும், சுனில் நரைன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதுடன், ஐ.பி.எல். தொடரின் தனது 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தோனி களமிறங்கிய போது ரசிகர்கள் கொடுத்த சத்தமான ஆரவாரத்தால் மைதானமே அதிர்ந்தது. ஒலி அளவு 125 டெசிபல்களாக ரசிகர்களின் சத்தம் உயர்ந்தது. ஆனால் ரசிகர்களின் ஆரவாரத்தை தாக்கு பிடிக்க முடியாமல் கொல்கத்தா அணி வீரர் ரசல் காதுகளை மூடிக்கொண்டார். அப்போது, ஃபோர் லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ரசல் ரசிகர்களின் சத்தம் காரணமாக தனது காதுகளை மூடிக்கொண்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Readmore: DMK | “உதயசூரியனுக்கு போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு”… சேலத்தில் தெறிக்க விட்ட உதயநிதி ஸ்டாலின்.!!

Advertisement