TERRORISM | பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்.!! 5 சீனர்கள் உட்பட 6 பேர் பரிதாப பலி.!!
TERRORISM: பாகிஸ்தான் நாட்டில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் சீனாவை(CHINA) சேர்ந்த 5 பொறியாளர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர.
பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு எல்லையில் இருக்கும் மாகாணமான கைபர் பக்துன்க்வா பகுதியில் உள்ள பிஷாம் தெஹ்சி என்ற பகுதியில் நடைபெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் 5 சீனர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பாகிஸ்தான் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தாசு என்ற பகுதியில் புதிதாக அணைக்கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தக் கட்டுமானத்தை சீனாவைச் சேர்ந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்தக் கட்டுமானத்தில் பணிபுரியும் சீனாவை சேர்ந்த 5 பொறியாளர்கள் தாசுவில் உள்ள தங்களது முகாமிற்கு இஸ்லாமாபாத்தில் இருந்து வந்து கொண்டிருந்தனர்.
சீன பொறியாளர்களின் வாகனம் வந்து கொண்டிருந்த கான்வாய் பாதையில் குறுக்கே புகுந்த தற்கொலைப்படை நபர் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட தனது வாகனத்தை சீனப் பொறியாளர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி வெடிக்க செய்தார் இந்தக் கொடூர தாக்குதலில் வாகனத்தில் இருந்த ஐந்து சீன பொறியாளர்கள் மற்றும் டிரைவர் ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக டான் செய்தி நிறுவனத்தை தொடர்பு கொண்ட பிஷாம் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி பக்த் ஜாஹிர் " இது ஒரு தற்கொலை படை தாக்குதல் என தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்த தாக்குதலில் இறந்த நபர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சீனா நாட்டைச் சேர்ந்தவர்கள் மீது பாகிஸ்தானில் நடத்தப்படும் இரண்டாவது பயங்கர தாக்குதல் இதுவாகும். கடந்த 2021 ஆம் ஆண்டும் இதே பகுதியில் பேருந்து மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். அதில் 9 பேர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.