For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வன்முறைக்கு மத்தியில் இம்ரான் கானின் மனைவி கடத்தப்பட்டாரா? பற்றி எரியும் பாகிஸ்தான்..

Imran Khan's Wife Bushra Bibi Go Missing Amid Crackdown on Protesters in Pakistan: Report
10:32 AM Nov 28, 2024 IST | Mari Thangam
வன்முறைக்கு மத்தியில் இம்ரான் கானின் மனைவி கடத்தப்பட்டாரா  பற்றி எரியும் பாகிஸ்தான்
Advertisement

பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2018 - 2022 வரை பிரதமராக இருந்தவர் இம்ரான் கான்.. தோஷகானா வழக்கு, சைபர் வழக்கு என 71 வயதான இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளில் கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இடையில் கடந்த பிப். மாதம் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடந்த நிலையில், அதில் இம்ரான் கான் கட்சியினர் போட்டியிட்டனர்.

Advertisement

இம்ரான் கானின் பிடிஐ கட்சியின் பெயர், சின்னம் முடக்கப்பட்ட நிலையில், சுயேச்சைகளாக அவரது கட்சியினர் களமிறங்கினர். அப்படியிருந்தாலும் சுமார் 90 இடங்களில் வென்றனர். இருப்பினும், இம்ரான் கான் தொடர்ந்து சிறையிலேயே அடைக்கப்பட்டு இருந்தார். இதற்கிடையே இம்ரான் கானை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் பேரணி நடத்தி வருகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த பேரணிக்கு இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி தலைமையேற்றார்.

அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. வன்முறையில், ஒரு போலீஸ் அதிகாரி உட்பட நான்கு பாதுகாப்புப் படையினர் சுட்டு கொல்லப்பட்டனர். இம்ரான் கான் ஆதரவாளர்களால் அங்குப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், போலீஸ் மீதான தாக்குதல்களும் அதிகரித்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பல இடங்களில் போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டதால் பல நூறு பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரை விடுவிக்கக் கோரி இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற கட்சி உறுப்பினர்கள் இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், புஷ்ரா பீபி கடத்தப்பட்டதாக பிடிஐ தலைவர் மரியம் வட்டு கூறினார். போராட்டத்திற்கு மத்தியில் புஷ்ரா பீபி கடத்தப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more ; 52,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்… ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு…!

Tags :
Advertisement