கருவளர்ச்சிக்கு சூப்பர் ரிசல்ட் கொடுக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு..!! வாரம் ஒருமுறை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?
அதிகளவில் போலெட்ஸ் நிறைந்துள்ள சர்க்கரை வள்ளிக் கிழங்கினை தினமும் உண்டு வந்தால் கரு வளர்ச்சிக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். சர்க்கரைவள்ளி கிழங்கில் அதிக அளவு பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்லெஸ், இரும்புசத்து, போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆண்டிஆஸிடண்ட்ஸ், இரும்பு, கால்சியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.
பொதுவாக கிழங்கு வகைகளில் கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும். ஆனால் சர்க்கரைவள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இதில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளதால் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கின்றது. மேலும் இரத்த சர்க்கரை அளவும் சீராக வைக்க உதவுகின்றது. அதிகளவில் நார்ச்சத்து நிறைந்து காணப்படும் சக்கரவள்ளி கிழங்கில் குடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தி மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது.
இதனை அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு ஏற்படும் பிரீ ராடிகள் செல் அழிவினை தடுக்க உதவும். மேலும் உங்களை எப்போதும் இளமையுடன் வைக்க உதவும். மேலும், உடலின் உள்ளே ஏற்படும் காயங்கள், வீக்கங்களை இது விரைவில் குணப்படுத்துகிறது. புகையிலை சார்ந்த பொருட்களை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு வாய் மற்றும் தொண்டையில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. இத்தகைய புற்று நோய் ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை அதிகம் சாப்பிட வேண்டும்.
மூச்சு சீராக இருக்க நமது நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பது அதிசயம். ஒரு சிலருக்கு நுரையீரல் காற்றுப் பையில் ஏற்படும் பிரச்சனை காரணமாக எம்பஸீமா எனப்படும் நோய் ஏற்படுகிறது. இந்த நோய் சீராக சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுத்தும். இந்த நோய் ஏற்பட்டவர்கள் அடிக்கடி சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிட்டு வருவதன் மூலம், இந்த நோய் குறைபாடு தீர்ந்து மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமங்களை போக்குகிறது.