திடீரென அறிவித்த ஸ்டிரைக்..!! இந்த தேதியில் சிலிண்டர்கள் விநியோகம் நடைபெறாது..!! முன்கூட்டியே புக் பண்ணிக்கோங்க..!!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 26ஆம் தேதி தமிழக அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அனைத்து எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமென் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்தியன், ஹெச்பி, பாரத் கியாஸ் ஏஜென்சி நிறுவனங்களின் கீழ் சிலிண்டர்களை டெலிவரி செய்யும் டெலிவரிமென், மெக்கானிக், ஓட்டுநர்கள், குடோன் கீப்பர், சிலிண்டர் லோடுமேன்கள், அலுவலகப் பணியாளர் உள்ளிட்ட அனைத்து சிலிண்டர் டெலிவரி தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை முழுமையாகவும், அகவிலைப்படியை முறையாக தொடர்ந்து உயர்த்தி வழங்க வேண்டும்...
தீபாவளி போனஸ் ரூ.12,000 வழங்க வேண்டும், ஒருநாள் சம்பளத்துடன் வார விடுமுறை வழங்க வேண்டும், அரசு விடுமுறை நாட்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ஆம் தேதி தமிழகளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமென் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் மாநில தலைவர் சிவக்குமார், துணைப் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில், "எல்பிஜி சிலிண்டர் நிறுவனங்கள் ஏஜென்சியின் கீழ் சிலிண்டர்கள் டெலிவரி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துகின்றனர். இந்த ஏஜென்சிகள் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதில்லை. எல்பிஜி நிறுவனத்திடம் கேட்டால் ஏஜென்சியிடம் கேளுங்கள் என கூறுகின்றனர். ஆனால், ஏஜென்சிகள் சில தொழிலாளர்களை மட்டும் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்கள் என அடையாளம் காட்டி ஊதியம் வழங்குகின்றனர்.
ஏராளமான தொழிலாளர்களுக்கு சீருடைகளை மட்டும் வழங்கிவிட்டு ஊதியம் வழங்காமல் ஏமாற்றுவதால் தொழிலாளர்களின் உழைப்பு வீணாகிறது. இது தொடர்பாக ஏஜென்சிகளிடம் கூறினால் பணிக்கு வர வேண்டாம் என கூறி மிரட்டுகின்றனர். எனவே, தொழிலாளர்களின் நலன் கருதி ஏற்கனவே சங்கத்தின் சார்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி அக். 26ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இதிலும் முடிவு எடுக்கப்படாவிட்டால், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துவோம்" என தெரிவித்தனர்.
சுமார் 50,000 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், அன்றைய தினம் சிலிண்டர் டெலிவரி செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சிலிண்டர் தேவைப்படுபவர்கள் முன்னதாகவே புக் செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : உங்களுக்கு இந்த தோஷம் இருக்கா..? அப்படினா இதை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க..!!