For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இரட்டை இலை வழக்கில் திடீர் திருப்பம்..!! மனுதாரருக்கு என்ன ஆச்சு..? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!!

The Supreme Court has dismissed the appeal petition regarding the two-leaves symbol.
04:21 PM Jan 20, 2025 IST | Chella
இரட்டை இலை வழக்கில் திடீர் திருப்பம்     மனுதாரருக்கு என்ன ஆச்சு    சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
Advertisement

இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டுமென்று சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ஐகோர்ட் வழங்கிய உத்தரவின் படி, இந்திய தேர்தல் ஆணையம் தொடர் விசாரணை நடத்தி வந்தது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், மனுதாரர், கே.சி.பழனிசாமி, புகழேந்தி ஆகிய அனைத்து தரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி அண்மையில் ஒரு கூடுதல் மனுவை தாக்கல் செய்தார். அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ள சூர்யமூர்த்தி என்பவர் அதிமுகவில் உறுப்பினரே இல்லை என தெரிவித்திருந்தார். கட்சியில் உறுப்பினர் இல்லாத ஒருவர் எப்படி வழக்கு தொடர முடியும்..? எனவே, சூர்யமூர்த்தியின் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என்று கோரினார்.

இந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் என்பவர் மேல்முறையீடு செய்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேல்முறையீடு செய்தவர் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்ததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்ற தடை தொடர்கிறது.

Read More : BREAKING | கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பலாத்கார வழக்கு..!! குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை..!!

Tags :
Advertisement