துணைவேந்தர் நியமனம்.. யுஜிசியின் புதிய விதிகளை திரும்ப பெற வேண்டும்..!! - மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
துணைவேந்தர் நியமனம் தொடர்பான யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெற வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெற தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 9ம் தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மான நகலையும் இணைத்து ஒன்றிய கல்வி அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தும்வகையில் இக்கடிதத்தை எழுதுவதாகவும், வரைவு நெறிமுறைகளில் உள்ள பல விதிகள் மாநிலங்களின் கல்விமுறை மற்றும் கல்விக் கொள்கைகளுக்கு முரணாக உள்ளன என்றும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், வரைவு யுஜிசி (இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம் வழங்குவதற்கான குறைந்தபட்ச தரநிலைகள்) - நெறிமுறைகள் 2024 தொடர்பான கவலைக்குரிய சில முக்கிய விதிகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
Read more ; BREAKING | கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பலாத்கார வழக்கு..!! குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை..!!