முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திடீர் திருப்பம்..!! பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் திமுக..? கொளுத்திப் போடும் முக்கிய புள்ளி..!!

10:35 AM Nov 06, 2023 IST | 1newsnationuser6
Advertisement

ஆளுநரின் செயல்பாடுகள், பாஜகவுடனான கூட்டணி முறிவு, நீட் விவகாரம் உள்ளிட்ட விவகாரம் குறித்து அதிமுகவின் ஐடி விங் துணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், திமுக ஆட்சியில் சீர்கெட்டு போயுள்ள சட்டம் ஒழுங்கு குறித்தும், சீரழிந்துபோன நிர்வாக முறை குறித்தும் பேச ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அதேசமயம், இங்குள்ள சித்தாந்தங்களை ஆளுநர் விமர்சித்துப் பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

Advertisement

காங்கிரஸ், பாஜக என மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் தனக்குத் தேவையான ஆட்களைத்தான் ஆளுநர்களாக நியமிப்பார்கள். அப்படி நியமிக்கப்பட்டவர்களும் மத்திய அரசின் விருப்பத்தின்படி செயல்படுவது, மாநில அரசுக்கு இடையூறு செய்வது என்பதெல்லாம் வழக்கமானது. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒருபடி மேலே சென்று சித்தாந்தங்களை விமர்சித்து பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.

திமுகதான் பாஜகவின் பி டீம். ஆட்சிக்கு வருவதற்கு முன் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் விட்டார்கள். இன்று கையை பிடித்து, காலில் விழாத குறையாகத்தான் வரவேற்கிறார்கள். திமுக மோடியையும் பாஜகவையும் பெரிதாக எதிர்ப்பதே இல்லை. போகிற போக்கை பார்த்தால் திமுகவும் பாஜகவும் கூட்டணி வைப்பதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. பிரதமரும் ஸ்டாலினுன் நல்ல நட்புறவில் இருக்கிறார்கள்” என்றார்.

Tags :
அதிமுகஅரசியல்திமுக - பாஜக
Advertisement
Next Article